குலதெய்வ கோவிலில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை… இதுல இவ்ளோ விஷயம் இருக்கா…?!

Published:

தலைமுடிதான் அழகு. மொட்டை போடுவது கேவலம் என சிலர் நினைப்பர். சிலர் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக நிறைய பணம் செலவு செய்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் சிலர் கோவில்களுக்கு மொட்டை அடிப்பதாக வேண்டி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மொட்டையடிப்பதை காண முடியும். பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதன் உண்மையான காரணத்தை பற்றிப் பார்க்கலாம்.

tonsure 2
tonsure 2

குழந்தைகள் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் உள்ளனர். அப்படி வயிற்றில் இருக்கும்போது தாய் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் அந்தக் குழந்தையின் தலையில் ஒட்டிக் கொள்ளும். அதனால் தான் நாம் குழந்தைகளுக்கு 5 வயதிற்குள் நிறைய முறை மொட்டை அடிக்கிறோம். மொட்டை அடிப்பதால் குழந்தை தலையில் உள்ள அனைத்து கசடுகளும் வெளியேறிவிடும். தவிர, குழந்தைகளுக்கு முடியும் வேகமாக வளர ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு மொட்டை அடித்த பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம். குழந்தையின் தலையை போட்டு தேய்க்காமல், மெதுவாக டவலால் ஒத்தி எடுங்க. சிறிது மஞ்சளும், சந்தனமும் சேர்த்துப் பூசலாம். மஞ்சள் கிருமி நாசினி, சந்தனம் குளிர்ச்சியைத் தரும். மொட்டை அடித்து ஓரிரு வாரம் வரை குழந்தையின் தலையில் ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். அந்த குலதெய்வத்தினை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். வீட்டில் எந்தவொரு சுப நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பாகவும் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள். குழந்தைக்கு, குலதெய்வக் கோவிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

குழந்தைகளுக்கு எப்போதும் ஒற்றைப் படை வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும். ஒன்று, மூன்று, ஐந்து போன்ற வருடங்களில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டும். பெரியவர்களுக்கு இந்த வயது கணக்கீடு இல்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

tonsure3
tonsure3

குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் ரத்த நாளங்களையும், நரம்புகளையும் தூண்ட உதவுகிறது.

குழந்தையின் பல் வளர ஆரம்பிக்கும்போது குழந்தையின் உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். அதனைத் தடுப்பதற்கும் மொட்டை அடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் தலையில் உள்ள தோலில் இருக்கும் தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன. வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால், வியர்வையால் ஏற்படும் பிரச்சனைகளும் தடுக்கப்படுகின்றன. மொட்டை அடித்த பிறகு சில காலம் வரை தலையைப் பராமரிப்பது எளிது. பேன், தொற்றுகள் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

மேலும் உங்களுக்காக...