இன்று முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்க… நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்…!

Published:

சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அமாவாசை அன்று புதிய வாகனங்களை வாங்குவாங்க, கடைகள் திறப்பு, புதிய இடங்களை பத்திரப்படுத்துவாங்க.

பொதுவாக அமாவாசை தினத்தை நல்ல நாளாக கருதுவார்கள். அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும். அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்தில் இருந்து பூமிக்கு வர்றாங்க. தலைமுறைகளாக உள்ள நாம எல்லோரும் நல்லா சந்தோஷமா இருக்கோமான்னு பார்க்க வாராங்க.

Annathanam 1
Annathanam

கண்காணிக்கவும் செய்றாங்க. வாரிசுகளான நாம துவங்கக்கூடிய காரியங்களைக் கரிசனத்தோட பார்க்குறாங்க. ஆசிர்வாதமும் கொடுக்குறாங்க. அதனால பித்ருகளான நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தி அமாவாசை தினத்தில் புதிய காரியங்களைத் தொடங்குனா நிச்சயமா பலன் கொடுக்கும்.

மனதில் வருத்தம், தயக்கம், பயம் இருந்தால் அமாவாசைக்கு மறுநாள் கூட செய்ய ஆரம்பிக்கலாம். ஏன்னா அமாவாசைக்கு மறுநாள் இருந்து வளர்பிறையா வந்துக்கிட்டு இருக்கும். இதனால நாம தொட்ட காரியங்கள் எல்லாமே வளர்பிறை மாதிரி அதிகரிச்சிக்கிட்டே இருக்கும். தொழிலும் விருத்தியாகும். லாபம் அதிகமாகும்.

இன்று சித்திரை அமாவாசை. இன்று காற்றில் வெப்பம் அதிகமாக இருக்கும். உடலிலும் அதிகமாக இருக்கும். நிறைய மாற்றங்கள், தாக்கங்கள் இருக்கும். சின்னதாக அடிபட்டால் கூட அதிகளவு ரத்தம் வெளியேறும். அமாவாசை, பௌர்ணமியில் நம் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. இன்று ஏதும் முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடாது.

இந்த நாளில் வாசல்களில் கோலம் போடக்கூடாது. நம் முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வரும் போது இந்த மாதிரி கோலங்கள் அவங்களுக்கு நெகடிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தும். அதனால கோலம் போடக்கூடாது. இந்தக் காரணத்தால அவங்க வர்றதும் தடைபடும். இதனால நமக்கு வர வேண்டிய ஐஸ்வரியங்கள் குறைய ஆரம்பிக்கும்.

அமாவாசை அன்று அன்னதானம் பண்ணலாம். சகல நன்மைகள் உண்டாகும். காகத்திற்கு உணவு வைக்கணும். இதனால எல்லாருக்குமே நன்மை ஏற்பட ஆரம்பிக்கும்.

Crow
Crow

இந்த நாளில் நாலு பேருக்காவது அன்னதானம் செய்தால் மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். முன்னோர்களது ஆசிர்வாதமும் நமக்கு முழுமையாக கிடைக்க ஆரம்பிக்கும். இந்த நாளில் மாமிச வகை உணவுகளை சாப்பிடவே கூடாது. எதனால என்று கேட்கலாம். இந்த நாளில் மாமிசம் சாப்பிடும்போது அவை நமது மனதில் மாற்றங்களை உண்டு பண்ணும்.

இதனால கெடுதல்கள் நடக்கும். வெங்காயம், பூண்டு இதையெல்லாம் சாப்பிடவே கூடாது. அதை சாப்பிட்டாலும் பாதிப்புகள் ஏற்படலாம். இந்த நாளில் யார் மேலயும் கோபப்படாதீங்க. யாரையும் திட்டாதீங்க. மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைச்சிடாதீங்க. முடிஞ்ச அளவு நல்லது, உதவிகள் பண்ணுங்க.

இப்படி நீங்க பண்ணுனீங்கன்னா உங்களுக்கு வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

 

 

 

மேலும் உங்களுக்காக...