தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?

முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும்.  இந்த…

thaipoosam lord muruga

முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். 

இந்த ஆண்டு தைப்பூசம் 11.2.2025 அன்று வருகிறது. 10.2.2025 அன்று மாலை 7.13 மணி முதல் 11.02.2025 அன்று மாலை 7.31 மணி வரை பூச நட்சத்திரம் வருகிறது. பௌர்ணமி 11.2.2025 அன்று மாலை 7.51 மணிக்கு துவங்குகிறது. பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் மாலை 7.31மணிக்குப் பிறகுதான் வருகிறது. அதனால இந்த விரதத்தை இன்றுதான் எடுக்கணுமான்னு கேட்டா இல்ல. எப்பவுமே ஒரு விரதத்துல சில விரதங்கள் நட்சத்திரத்திலும் சில விரதங்கள் திதிகளிலும் பிரதானமாக எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த விரதத்தில் நமக்கு சொல்லப்பட்டு இருப்பது தைப்பூசம். அதனால் கோவில்களிலும், வழிபாடுகளிலும் இந்த நட்சத்திரத்தின் அன்றே வழிபடுவர். அதே போல இரண்டும் சேர்ந்து இருக்கணும்னு நினைப்பவர்கள் இரவு 8மணிக்கு ஒரு டம்ப்ளர் பால் வைத்து வழிபடலாம். மலேசியா, இலங்கை, லண்டன், கனடான்னு உலகநாடுகளில் வழிபடக்கூடிய பக்தர்கள் தைப்பூசத்தன்று சிறப்பாக வழிபடுவர். அனைவரும் இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு பண்ணி அவரது பேரருள், பெருங்கருணையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நாலு பேருக்காவது அன்னதானம் செய்ய முடியாதவர்கள் ஒருவருக்காவது உணவு வாங்கிக் கொடுங்க. நாய், காக்கா, பூனை என ஏதோ ஒரு உயிருக்குக் கொடுங்க. ஏதோ ஒரு ஜீவராசியின் பசிப்பிணியைப் போக்கணும். எல்லா உயிர்கட்கும் பசிப்பிணியைப் போக்குவதையேத் தன் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக செய்தவர் வள்ளல் பெருமானார். அதனால் வள்ளல் பெருமானுக்கும் வழிபாடு செய்வதை மறந்துடாதீங்க. மாலையில் கோவிலுக்குப் போய் வழிபடலாம்.