உலகத்தில் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருப்பது சீனா. கல்வி தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும் புதுமையான விஷயங்களை கண்டுபிடிப்பது சீனா தான். தற்போது ரோபோகளையும் தீவிரமாக புதுவிதமாக வடிவமைத்துக்கொண்டு இருக்கிறது சீனா. அந்த வகையில் தற்போது மாரத்தானில் ரோபோக்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதை பற்றி இனி காண்போம்.
பெய்ஜிங்கில் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் மாரத்தானில் மனிதர்களோடு ரோபோகளும் கலந்துகொள்ள இருக்கிறது. 12,000 பேர் இந்த மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதில் 12 ரோபோக்களும் ஓடவிருக்கிறது.
இந்த ரோபோக்கள் மாரத்தானில் ஓடுவதற்காக பிரத்தியேகமாக மனிதர்களைப் போலவே வடிவமைக்கபட்டு இருக்கிறது. மனிதர்களுக்கு இணையாக சக்கரம் இல்லாமல் கால்களிலேயே நிற்க வேண்டும் நடக்க வேண்டும் ஓட வேண்டும் என்று விதியில் இந்த ரோபோக்கள் உருவாகிறது. இந்த ரோபோவை இயக்குப்பவர்கள் மாரத்தானுக்கு நடுவில் பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற வசதியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சீன அரசாங்கம் இந்த முன்னெடுப்பை எடுப்பதற்கான காரணம் சீனாவில் அதிக அளவில் முதியோர்கள் இருக்கிறார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லை. இந்த வகை ரோபோக்கள் அவர்களை கவனித்துக் கொள்ள பெருமளவு உதவும் என்று கருதப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் மற்ற விளையாட்டு போட்டிகளிலும் ரோபோக்களை கலந்து கொள்ள வைக்க சீன அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது.