இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!

இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…

lord muruga, vallalar

இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப ஆராதனைகள் பண்ணி வழிபடுங்க. திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, வேல் மாறல் படிக்கலாம். நைவேத்தியம் பால், பாயாசம்னு ஏதாவது வைங்க. முடியாதவர்கள் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைங்க.

அன்றைய தினம் வள்ளலார் நமக்கு ஜோதி சொரூபமாகக் காட்சி கொடுத்த நாள். அதனால் மதியம் நாம் வள்ளல் பெருமானையும் வழிபாடு பண்ணலாம். தயிர்சாதம், அப்பம் இரண்டும் மதிய உணவுக்கு பண்ணுங்க. இது வள்ளல் பெருமானுக்கு பிடித்தமானவை. மதியம் சமையல் செய்பவர்கள் இலை போட்டு வள்ளல் பெருமானுக்கு நைவேத்தியம் பண்ணலாம்.

திருவிளக்கு ஏற்றி நாம செய்து இருக்குற பிரசாதத்தை வைத்து விட்டு ‘அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி’ என்ற வள்ளல் பெருமானின் மிகப்பெரிய தாரக மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். இது எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னா கொத்த வரும் பாம்பு கூட இந்த மந்திரத்தால் தன்னை அடக்கிக்கொண்டு அப்படியே போய்விடுமாம். அப்படிப்பட்ட அருட்சக்தி நிறைந்த மந்திரம்.

பயத்தைப் போக்கக்கூடியது. ஆற்றல்களைப் பெற்றுத் தரும் மந்திரம். நம்முள் இருக்கும் ஞானஜோதியை நாம் அறிந்து கொள்வதற்கான ஒரு மந்திரம். இந்த மந்திரத்தைச் சொல்லி வள்ளல் பெருமானை வழிபாடு பண்ணுங்க. அவருக்கு நைவேத்தியம் பண்ணுங்க. தொடர்ந்து கண்டிப்பாக அன்று அன்னதானம் செய்ய வேண்டும்.