தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?

பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின்  அடிப்படையில் இந்த நாள்…

thai poosam 2025

பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின்  அடிப்படையில் இந்த நாள் மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. வரும் 11.2.2025ல் தான் தைப்பூசமும், தை பௌர்ணமியும் வருகிறது.

மிகவும் சிறப்பு வாய்ந்த தை பெளர்ணமி நாளில் சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து வழிபட்டால் பல விதமான கஷ்டங்களும் தீரும். வழக்கமாக வீட்டில் விளக்கேற்றும் போது நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ, அதற்குரிய பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அந்த பிரச்சனை தீருவதுடன், தெய்வீக அருளும் கிடைக்கும்.

அனைத்து பௌர்ணமிகளும் விசேஷமான, தெய்வீக சக்தி நிறைந்த நாள் என்றாலும் தை, சித்திரை, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட ஒரு சில மாதங்களிலும் வரும் பெளர்ணமிக்கு தனியான சிறப்பு உண்டு. தை பெளர்ணமி, முருகப் பெருமானுக்குரிய தைப்பூச தினமாக கொண்டாடப்படுகிறது.

தை பெளர்ணமி நாளில் சந்திரனின் தெய்வீக கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதாக ஐதீகம். அதே போல் ஆன்மிக பலம், ஆரோக்கியம், உயர்ந்த நிலை, ஆற்றலை பெற விரும்புபவர்கள் இந்த நாளில் சூரியனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் அதிகாலையில் புனித நீராடி, தானங்கள் அளிப்பதால் வெற்றி, செல்வ வளம், மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.

இந்த நாளில் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும் ஏன்பது நம்பிக்கை. தை பெளர்ணமி துர்கை வழிபாட்டிற்கும் ஏற்ற நாள். அம்பிகை, உலகில் உள்ள உயிர்களின் பசியை போக்குவதற்காக காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க அம்பிகை பூமியில் அவதரித்த நாளாகவும் இதை சொல்கிறார்கள்.

ஜாதகத்தில் நவகிரகங்களால் பிரச்சனை உள்ளது என்பவர்கள் தை பெளர்ணமி நாளில் வீட்டில் உள்ள மூன்று தானியங்களை வைத்து பூஜை செய்யலாம். ஒரு தட்டில் ஒரு கைபிடி அளவு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். துவரை, செவ்வாய் பகவானுக்குரிய தானியம்.

செவ்வாய் கிரகத்திற்குரிய தெய்வமாக விளங்கக் கூடியவர் முருகப் பெருமான். அவருக்குரிய தைப்பூச நாளில் துவரம் பருப்பு வைத்து வழிபடுவது நிலம், வீடு, சொத்து ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள், திருமண தடை ஆகியவற்றை போக்கும். பெளர்ணமி என்பதால் சந்திரனுக்குரிய தானியமான நெல் அல்லது பச்சரிசியை வைத்து வழிபடலாம்.