தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!

முன்னோர்கள் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஏதாவது செய்கிறோமா? அவர்கள்தான் போய்ச் சேர்ந்து விட்டார்களே இனி என்ன செய்றதுன்னு ஒருபோதும் சொல்லாதீங்க. நீங்கள் சரியாக அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது…

thai amavasai time

முன்னோர்கள் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஏதாவது செய்கிறோமா? அவர்கள்தான் போய்ச் சேர்ந்து விட்டார்களே இனி என்ன செய்றதுன்னு ஒருபோதும் சொல்லாதீங்க. நீங்கள் சரியாக அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது தான் அந்த ஆன்மா எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்கும். அவர்கள் செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம்.

அதனால் அந்த நன்றியை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நாம் ஒழுங்காக இதுபோன்ற செயல்களைச் செய்தால் தான் நாளை நம் அடுத்த சந்ததியினரும் இதை முறைப்படி செய்வார்கள். தலைமுறை நிலைத்து நிற்கும். அதனால் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான் இது.

அவர்கள் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும். அதே நேரம் முன்னோர்களை மதித்து அவர்களின் நினைவாக நாம் வழிபடுவதும், தர்ப்பணம் கொடுப்பதும் தான் நமது கடமை என்பதை உணர வேண்டும். சரி. இந்த தை மாத அமாவாசை இந்த ஆண்டில் எப்போது ஆரம்பிக்கிறதுன்னு பார்க்கலாமா… இன்று (28ம் தேதி) இரவு 8.10 மணி முதல் நாளை (29ம் தேதி) இரவு 7.21 மணி வரை அமாவாசை உள்ளது.

தர்ப்பணம் கொடுக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரையும், காலை 9 மணி முதல் 11.55மணி வரையும் தர்ப்பணம் செய்யலாம். இந்த ஆண்டு திருவோண நட்சத்திரமும அமாவாசை அன்று இணைந்து வருகிறது. நாளை காலை 9.21 மணி முதல் 11.55மணி வரையில் இந்தத் திருவோண நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம்.

மதியம் இலை போட்டு உணவு படையல் கொடுக்க ஏற்ற நேரம் நாளை மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை உகந்தது.

மாலை விளக்கேற்றி வழிபட நாளை மாலை 6மணி முதல் 7 மணி வரை உகந்த நேரம். சூரிய உதயத்திற்குப் பிறகுதான் எப்போதும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆதித்ய பகவானை சாட்சியாக வைத்துத் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.