200 ஆண்டுகள் வாழ்ந்த அதிசய அற்புத சித்தர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் சுரைக்காய் சித்தர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த பம்பாய் மெயில் ரெயிலையே தன் கையில் இருந்த தடியால் நிறுத்தியவர் தான் இந்த சுரைக்காய் சித்தர். பாரத தேசத்தில் பல சித்தர்கள் நமக்கு அருள்மழை பொழிந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் இவர்.
முதிர்ந்த தோற்றம். தலைப்பாகை. நீண்ட தாடி. கருணை பொழியும் கண்கள். சுரைக்காய் குடுக்கை கட்டப்பட்ட தாழி, கையில் பழைய துணி மூட்டை இவை தான் இவரது அடையாளங்கள். சித்தர்கள் சுரைக்காய் குடுக்கையை வைத்து இருப்பது ஏன்? கையில் இருக்கும் சுரைக்காயின் உள் இருக்கும் சதையை நீக்கினால் சுரைக்காய் குடுக்கையாக மாறி பயன் அளிக்கிறது.
அது போல தான் மனிதனும் தன் உள்ளே இருக்கும் நான் என்ற அகந்தையை அகற்றினால் இறைவனை அடையலாம் என்பதே சுரைக்காய் சித்தர் உணர்த்தும் உண்மை. அரக்கோணம், ரேணிகுண்டா இடையில் உள்ள ஊர் புத்தூர். அதன் கிழக்கே 3 மைல் தொலைவில் உள்ளது நாராயணவனம். இங்கு வாழ்ந்தவர் தான் சுரைக்காய் சித்தர்.
இதன் அருகில் திருப்பதி, காளஹஸ்தி, நாகலாபுரம் ஆகிய புண்ணிய தலங்கள் உள்ளன. குஷ்ட வியாதிக்காரர்களைத் தன் அருள்பார்வையால் குணமாக்கினார். 1902ல் அவர் மகாசமாதி அடைய ஒருநாள் முன்பு சென்னையில் இருந்து நாராயணபுரம் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார் சுரைக்காய் சித்தர். கார்டு பச்சைக் கொடியைக் காட்டினார். ஆனால் பம்பாய் மெயில் ரெயில் ஒரு இஞ்ச் கூட நகரவே இல்லை.
ரயில் நகராததால் மற்றொரு இஞ்சினும் இணைக்கப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது. சுரைக்காய் சித்தர் தன் கைத்தடியால் ரயிலின் மேல் பாகத்தில் முட்டுக்கொடுத்து பிடித்து இருந்தார். அது கட்க முத்திரை. கையை வாள் போல ஏந்தி நிற்கும் ஒரு அபூர்வ முத்திரை. அவர் கையை இறக்கியதும் தான் ரயில் கிளம்பியது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



