சுமங்கலிப் பெண்களுக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிங்க..!

Published:

பொதுவாக வீட்டில் விளக்கு ஏற்றி விட்டால் தானம் கொடுக்கக்கூடாது. வாங்கவும் கூடாது என்பர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் சுமங்கலிப் பெண்கள் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்? அவர்கள் ஏதும் கேட்கவில்லை.

தானம் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் எழலாம். அப்படிக் கொடுத்தால் என்ன தானம் கொடுக்க வேண்டும் என்றும் உங்கள் மனதிற்குள் சந்தேகங்கள் எழக்கூடும். தொடர்ந்து படிங்க… உங்கள் ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றால், அவர்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும். பூ கொடுக்க வேண்டும் என்று நம்முடைய அம்மா பாட்டி எல்லாம் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் நிறைய பேர் அதை இப்போது கடைபிடித்து வருகிறார்கள். அது தவறு கிடையாது.

இப்படி செய்தால் ஐஸ்வர்யம் நம் வீட்டை விட்டு சென்று விடுமோ என்ற சந்தேகமும் நிறைய பேருக்கு இருக்கிறது. இது ரொம்பவே தவறான எண்ணம். சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்களை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும், நம் வீட்டில் இருந்து தானமாக கொடுக்கலாம்.

Amman
Amman

வீட்டில் பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது என்றாலும் தவறு கிடையாது. உங்கள் வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்ணுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, ரவிக்கை துணி வளையல், சீப்பு இந்தப் பொருட்களை எல்லாம் தாம்பூல தட்டில் வைத்து தானமாக கொடுக்கலாம்.

நம் வீட்டிற்கு வந்த அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாக காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அந்த பொருட்களை தானம் செய்கின்றோம். சுமங்கலி பூஜை செய்கிறோம். சுமங்கலி பூஜை செய்யும் போது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டு தான் இருக்கும். வீட்டிற்கு வந்த பெண்களுக்கு தாம்பூலம், பிரசாதம், வஸ்திரம் என்று நிறைய பொருட்களை தானமாக கொடுக்கிறோம்.

சுபிட்சம் தரக்கூடிய மங்களகரமான பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கும் போது வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆயுள் பலம் கூடும். செல்வ வளம் பெருகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். மனதில் தயக்கத்தோடு சுமங்கலி பெண்களுக்குத் தானம் செய்வதற்கு நீங்கள் செய்யாமலேயே இருக்கலாம். அதற்கு செய்யாமலே இருந்து விடலாம்.

இதையெல்லாம் தானம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் நமக்கு அப்படியே போன போக்கில் சொல்லவில்லை. மஞ்சள் என்பது குருவின் அம்சம். குங்குமம் என்பது செவ்வாய் அம்சம். வஸ்திரம் என்பது சுக்கிரனின் அம்சம். வெற்றிலை பாக்கு தேங்காய் என்று எல்லாமே ஒவ்வொரு கிரகங்களையும் குறிக்கும் ஒரு பொருளாகவே சொல்லப்பட்டுள்ளது.

Sumangali3
Sumangali3

நம்முடைய பிறப்பில் ஜாதக கட்டத்தில் நவகிரகங்களின் மூலம் ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அந்த தடையை சரி செய்வதற்காகத்தான் இப்படிப்பட்ட தானங்களைக் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஆகவே எதையும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

மனதில் நல்லதை நினைத்து மன நிறைவோடு செய்யக் கூடிய தானம் உங்களுடைய பரம்பரையை வாழச் செய்யும்.

மேலும் உங்களுக்காக...