வேறெங்கும் இல்லாத சிறப்பு…! குடைவரைக் கோவிலில் அருள்பாலிக்கும் அதிசயப் பிள்ளையார்

Published:

பிள்ளையார்பட்டி என்ற பெயரைக் கேட்டதுமே “பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா… கணேசா நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா… ” என்ற சினிமா பாடல் தான் நம் நினைவுக்கு வரும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தப் பிள்ளையாருக்கு உண்டு. அப்படி என்ன அதிசயம் என்று கேட்குறீர்களா? வாங்க பார்க்கலாம்.

இந்த விநாயகர் மட்டும் தான் குடைவரைக் கோவிலில் புடைச்சிற்பமாக உள்ளது. அதே போல் கற்பக விநாயகரின் துதிக்கையானது வலம் சுழித்ததாக அமைந்துள்ளது.

மற்ற தலங்களில் இருப்பது போல 4 கரங்களுடன் இல்லாமல் இந்தப் பிள்ளையார் 2 கரங்களுடனே காட்சி தருகிறார். அதே போல அங்குச பாசங்களும் இவரிடத்தில் இல்லை. மாறாக அன்பே உருவாய் காட்சி தருகிறார்.

Pillaiyarpatti 2
Pillaiyarpatti 2

பிள்ளையார் இந்தத் தலத்தில் அர்த்த பத்ம ஆசனத்தில் அமர்ந்துள்ளார். பிள்ளையார்பட்டிக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திருலீங்கைக்குடி, திருலீங்கைசவரம், இராசநாராயணபுரம் என்றும் வேறு பெயர்கள் உள்ளதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

இத்தலம் முதலாம் மகேந்திரவர்மன் அல்லது முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தில் அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

குடைவரையில் உள்ள பெரும்பரனான் கல்வெட்டை ஆராய்ந்து பார்த்தால் மகேந்திர வர்மன் காலத்துக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கல், மரம், சுதை, உலோகம் இல்லாமல் கற்றளியாக அமைக்கப்பட்ட முதல் குடவரைக் கோவில் பிள்ளையார் பட்டி.

1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த கோவில் என்று கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு தேடி வந்து பிள்ளையாரை வழிபடும் பக்தர்களுக்கு செல்வமும், புகழும் கூடி வருகிறது என்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

Pillaiyar patti 3 1
Pillaiyar patti 3

இங்குள்ள பிள்ளையாருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவது மரபு. இங்கு சகஸ்ரநாம அர்ச்சனைக்காக தினமும் 108 கொழுக்கட்டைகள் படைக்கப்படுகின்றன. அதே போல் விநாயக சதுர்த்தி அன்று 18 படி அரிசியில் ஒரே மோதகத்தைச் செய்து படைக்கின்றனர்.

இதை 3 நாள்களாக செய்கின்றனர். 10 பேர் தூக்கி வருவார்கள். மறுநாள் அதைப் பிட்டுப் பிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். இங்கு அபிஷேக தீர்த்தமானது காண்டாமிருகக் கொம்பின் வழியாக விழுகிறது. இங்குள்ள அலங்கார மண்டபமும், சுரங்கக் கிணறுகளும் காணத்தக்கவை.

மேலும் உங்களுக்காக...