இந்துக்களின் பிரசித்திப் பெற்ற திருநாளான பங்குனி உத்திரம் நாளை ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று குழந்தைக்காக, கல்யாணத்துக்காக பட்டினி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நெய்விளக்கு ஏற்றுங்கள். முடிந்தால் சற்கோண தீபம் ஏற்றுங்கள். முருகனின் திருவுருவப்படத்துக்கு சிகப்பு கலரில் மலர் கிடைத்தால் போடுங்க. அல்லது ஏதாவது ஒரு மலர்மாலை சாத்துங்க.
அப்புறம் தம்பதி சகிதமாக முருகனிடம் தங்களது பிரார்த்தனையை முன்வைத்து வேண்டிக்கிட்டு விரதத்தை ஆரம்பிங்க. சாமிக்கு ரெண்டு வெத்தலைப்பாக்கு வைத்து நைவேத்தியம் பண்ணலாம். அல்லது ஒரு டம்ளர் பால் சர்க்கரை கலந்து வைக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு பண்ணிட்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். நடுவில் நீராகாரமாக பால், இளநீர் தேவை எனில் அவரவர் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்து எடுத்துக் கொள்ளலாம்.
விரதம் இருக்காதவர்கள் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். முருகனுக்கு ரொம்ப விசேஷமாகிய தேனும், தினைமாவும் வைத்து நைவேத்தியம் பண்ணிக்கலாம். எதுவுமே முடியாதவர்கள் பழங்கள் வைத்து நைவேத்தியம் பண்ணுங்க. கல்யாண விரதம் என்பதால் இனிப்பாக சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் பண்ணுங்க.
விரதம் இருப்பவர்கள் மாலையில் இந்த நைவேத்தியத்தை வைத்து வழிபடுங்க. மற்றவர்கள் வழிபடுவதற்கு ஏற்ற எந்த நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கலாம். படையல் போடுபவர்கள் மதிய நேரத்தைப் பயன்படுத்திக்கலாம். பால் குடம் எடுத்து அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் பால்குடம் எடுத்து முடித்ததும் விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அவர்கள் ஏற்கனவே விரதம் இருந்துதான் பால் குடம் எடுப்பார்கள்.
பூஜையில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், அனுபூதி படிங்க. அருணகிரிநாதர் அருளிய மந்திரங்களைப் படிங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



