விடிந்தால் பௌர்ணமியுடன் கூடிய பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் நாம் விரதம் இருந்து நைவேத்தியம் எப்படி செய்து வழிபடுவது என்று பார்த்திருப்போம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இந்த நாளில் செய்ய வேண்டும். என்னன்னு பார்க்கலாமா…?
பங்குனி உத்திரத்தன்று நாம் மறக்கக்கூடாது ஒரு விஷயம் அன்னதானம். இந்த நாளில் விசிறி, செருப்ப, குடை தானம் செய்வாங்க. இதெல்லாம் எதுக்காகன்னா வெயில்ல நிறைய பேர் துன்பப்படக் கூடாது. ஏன்னா இந்த நாளில் தான் பால்குடம் எடுத்து பக்தர்கள் வெயிலில் போவாங்க.
அவங்களுக்கு அந்த நேரத்துக்குத் தேவையான விசிறி, குடை, நீர் மோர், பானகம் கொடுப்பாங்க. இந்த தானம் கொடுத்தா இந்தப் பலன் கிடைக்கும்னு நினைச்சிப் பண்ணாதீங்க. தானம் கொடுப்பது பிறருக்கு ஈகைக் குணத்தோடு உயர்ந்த தரும சிந்தனையோடு ஒருவருக்குப் பொருளைக் கொடுக்கும்போது நமது குணங்கள் மேம்பட ஆரம்பிக்கும். பாவ எண்ணங்கள், செயல்கள் குறைய ஆரம்பிக்கும்.
அதனால இது பண்ணினா இது கிடைக்கும்னு எதிர்பார்ப்போடு பக்தி இருந்துடக் கூடாது. உண்மையான ஆத்மார்த்தமான அன்போடு நீங்க என்ன தானம் பண்ணினாலும் இறைவன் ஏற்றுக் கொள்வார். ரெண்டு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க. அதுவே போதும். நாம் வேண்டும் வரங்களை முருகப்பெருமான் வழங்குவார். பௌர்ணமி என்பது முழுமைப் பெற்ற நாள்.
அடுப்படியில் மளிகைச் சாமான்கள் நிறைவாக இருந்தால் சந்தோஷம். அப்பாவிடம் கைநிறைய காசு இருந்தால் சந்தோஷம். எல்லாருக்குமே நிறைவாக இருப்பது ஒரு மகிழ்ச்சியைத் தரும். அதுதான் பௌர்ணமி. இது நிறைந்த நாள். முழுமைப் பெற்ற நாள். இந்த நன்னாளில் நாமும் நமது வாழ்க்கைத் தேவைகளையும், தெய்வீக சிந்தனைகளையும் முழுமையாக வைத்துக் கொண்டால் அது கண்டிப்பாக பங்குனித்திருநாள் அன்று நல்ல பலனைப் பெற்றுத் தரும்.
எல்லாரும் மகிழ்வாக முருகப்பெருமானை வேண்டி இந்தப் பங்குனி திருநாளில் இறையருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



