ஆயிரம் பிறைகளைக் கண்டால் இத்தனை நன்மைகளா…? வருகிறது சந்திர தரிசனம்…. மிஸ் பண்ணிடாதீங்க..!

Published:

வானில் வட்ட வடிவில் பளிங்கு போல் வெள்ளை வெளேர் என தெரியும் சந்திரனைப் பார்க்கும் போது மனதில் நமக்குள் ஒரு இனம்புரியாத அமைதி நிலவுகிறது. இதை நாம் பௌர்ணமி நாளில் நன்கு உணரலாம்.

மூன்றாம் பிறையைப் பார்ப்பது தான் சந்திர தரிசனம். 1000 பிறைகளைப் பார்ப்பவர்கள் தெய்வ சாநியத்தத்தை அடைவர். சந்திர தரிசனமான மூன்றாம்பிறையைக் காண்பவர்களுக்கு பூர்வமான புண்ணியங்கள் வருகிறது.

Moondram pirai
Moondram pirai

வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் என்று கோளறு பதிகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. சிவபெருமானின் முடிமேல் இருக்கிறார் சந்திரன். மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு நல்ல நல்ல பலன்கள் உண்டாகின்றன. சந்திரன் மனோகாரகன்னு சொல்லப்பட்டு இருக்கிறது.

1000 பிறைகளைப் பார்க்கும்போது 84 வயசு. அவர் சதாபிஷேகத்தையும் தாண்டி வந்து விட்டார். அவ்வளவு விசேஷமானது இந்த மூன்றாம்பிறை.

காலண்டரிலோ அல்லது பஞ்சாங்கத்திலோ சந்திர தரிசனம் என்று போட்டு இருந்தால் அன்று கண்டிப்பாக நீங்கள் இரவு சந்திரனைப் பார்த்து தரிசித்து விடுங்கள். குழந்தைகளுக்குக் காட்டுங்கள். பௌர்ணமி அன்று சந்திரனைப் பாருங்கள். எவர் ஒருவர் பிறையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு பூரணமான நன்மைகள் உண்டாகிறது.

சூரிய பகவானிடமிருந்து உன்னதமான சக்தி உடம்பில் போகும்போது நமக்கு எண்ணற்ற ஆற்றல்கள் உண்டாகின்றன. சந்திரனிடமிருந்து சக்தி உடலுக்குள் போகும்போது எண்ணமும், செயலும் ஒரே மாதிரி இருக்கிறது.

செவ்வாயில் இருந்து நமக்கு சக்தி ஆற்றல் வரும்போது நோயற்ற வாழ்வை வாழ முடியும். தைரிய ஸ்தானம் பலம் பெறும். புதன் என்ற ஒரு கிரகம் நமக்குள்ள பலமாக இருக்கும்போது படிப்பு, ஞானம், அறிவு மேம்படும்.

வியாழன் என்ற கிரகம் நமக்குள் இருக்கும்போது தடங்கல்கள் எல்லாம் போயிடும். நன்மை கூடி வரும். எண்ணிய காரியங்கள் வெற்றி பெறும். சுக்கிர பகவான் நமக்குள்ள பலமிருக்கும்போது பொன், பொருள், குடும்ப ஒற்றுமை, அன்யோன்யம்னு எல்லாம் சேர்ந்து வந்துடும்.

சனி பகவான் நமக்குள்ள பலமாக இருக்கும்போது ஆயுள் விருத்தி ஏற்படும். ராகு, கேது நமக்குள் பலமாக இருக்கும்போது எண்ணற்ற தடங்கல்கள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய தன்மையும், ஆற்றலும் நமக்குள் வருகிறது.

Lord Shiva
Lord Shiva

முடிமேல் அணிந்த அதனால் என்று சொல்லும்போது சிவபெருமானே தனது தலைமுடியின் மேல் மூன்றாம்பிறையாகிய சந்திரனை அணிந்துள்ளார் என்பதால் அதனை நாம் தரிசிக்கக் கோடி புண்ணியம் உண்டாகும் என்பதை நாம் உணர வேண்டும். அதனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த சந்திர தரிசனத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

வரும்  23.03.2023 (வியாழக்கிழமை) அன்று இந்த உன்னதமான சந்திர தரிசனம் வருகிறது. அதனால் மூன்றாம்பிறையக் கண்டு தரிசித்து நம் வாழ்வில் வளம் பல பெறுவோமாக.

மேலும் உங்களுக்காக...