வீட்டில் மகாலெட்சுமி தங்க, செல்வ வளம் பெருக கண்டிப்பா இதை செய்யுங்க…

By Meena

Published:

உங்கள் வீட்டில் மகாலட்சுமி பரிபூரணமாக அருள் பாலித்தால் மட்டுமே அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும். மகாலட்சுமியின் அருள் இருக்கும்போது அந்த வீட்டில் பணக்கஷ்டம், தொழில் நஷ்டம் போன்றவைகள் இருக்காது. வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக சில வழிமுறைகள் இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்வென்று இனி காண்போம்.

சில வீட்டில் பண வரவு இருக்காது. பணவரவு வந்தாலும் கையில் தங்காமல் செலவாகி கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மகாலட்சுமி வணங்கி கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். உப்பு, பருப்பு, அரிசி, ஊறுகாய் போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் இந்த பொருட்கள் எப்போதும் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். சுத்தமாக காலியாவதற்கு முன்பே வாங்கி வைத்து விட வேண்டும்.

சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகியவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தூங்கி எழும்போது இவற்றில் கண்விழிப்பது மிகவும் சிறப்பு. எல்லோராலும் குறைந்தபட்சம் உள்ளங்கையில் விழிக்க முடியும் அதை செய்யலாம்.

நம் வீட்டில் பணம் நகை வைக்கும் முக்கியமான பொருள் பீரோ. அதனால் பணம் நகை வைக்கும் பீரோவில் நகை அல்லது பணப்பெட்டியில் பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் ஆகிய மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி வைத்து வாராவாரம் வெள்ளிக்கிழமை தூபம் போடுவது செல்வத்தை ஈர்க்கும்.

சுத்தமான இடத்தில் மகாலட்சுமி குடியேறுவார். விளக்கு எரியும் வீடு மகாலட்சுமிக்கு பிடித்தமான இடமாக இருக்கும். நம் வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். துளசி மாடம் வைத்திருப்பவர்கள் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் ஆன நான்கு முதல் ஐந்து முப்பது மணிக்குள் எழுந்து விளக்கேற்றினால் மகாலட்சுமி மனது குளிர்ந்து பரிபூரண ஆசி வழங்குவாள் என்பது ஐதீகம்.

நம் வீட்டிற்குள் ஊதுபத்தி சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களை உபயோகப்படுத்தி எப்பவும் வீடு மனத்துடன் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் புரிவாள். வீட்டில் மங்கள சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டு நிலை வாசலில் விளக்கு ஏற்றினால் அது பணவரவை அதிகரிக்கும். இவ்வாறாக நம் வீட்டில் பின்பற்றி நடந்து கொண்டால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்வதோடு செல்வ வளம் பெருகும்.

மேலும் உங்களுக்காக...