ஒரே நாடு, ஒரே தங்க விலை’ என்பது நடைமுறையில் சாத்தியமா?

Published:

தங்கம் விலை என்பது உலகம் முழுவதும் ஒரே விலையில் நிர்ணயம் செய்யப்படும் என்றாலும் வரி உள்பட சில விஷயங்கள் காரணமாக ஒவ்வொரு நகருக்கும் தங்கத்தின் விலை சில மாற்றங்கள் உள்ளன என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்தியாவை பொருத்தவரை சென்னையில் ஒரு விலை, மும்பையில் ஒரு விலை, டெல்லியில் ஒரு விலை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே தங்கம் விலை சாத்தியமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் இது 100 சதவீதம் சாத்திக்கமில்லை என்றும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப்படுவதால் விலை சிறிதளவு மாறுபடத்தான் செய்யும் என்றும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் செய்கூலி மற்றும் சேதாரங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கடையிலும் வேறுபாடாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு மாநிலத்திற்கு உள்ளேயே ஒரே விலை என்பது சாத்தியமில்லை என்று கூறுகின்றனர். எனவே தான் தங்கத்தின் விலை பல மாநிலங்களில் விலை வித்தியாசமாக விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

அதே போல் தங்க நகைகளின் தன்மையும் ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்றும் அதற்கேற்ற மாதிரி தான் விலையும் இருக்கும் என்றும் ஒரே பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார் பைக்குகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக விற்கப்படுவது போல் தான் தங்கத்தின் விலை என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஒரு வேலை ஒரே நாடு ஒரே தங்கம் என்று கொண்டு வர வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் தங்கத்திற்கான வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவை ஒரே விதமாக ஆக வேண்டும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். வரி மட்டும் இன்றி போக்குவரத்து செலவு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அதை பொருத்துதான் தங்கத்தின் விலை மாறுபடுகிறது என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தங்க விலை என்பதையும் தாண்டி ஒரே உலகம் ஒரே தங்க விலை என்று கொண்டு வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும் என்றும் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் தங்கத்தை சேமிப்பிற்காக முதலீடு செய்யும் நினைப்பவர்கள் டிஜிட்டல் தங்கத்திற்கு செல்வது சிறந்தது என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...