ஒரே நாளில் 8 வகையான ரூபங்கள்… அன்னை மீனாட்சியின் மகத்துவம்!

மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.…

மதுரையில் சித்திரை திருவிழா களைகட்டி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் சில தினங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடந்தேற உள்ளது. இப்போது மீனாட்சி அம்மையின் தனித்துவம் பற்றிப் பார்ப்போம்.

மதுரையில் சித்திரை திருவிழாவில் முத்தாய்ப்பானது அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம். ஒரு ஆலயத்தில் அம்பிகை என்ன ரூபத்தில், என்ன கோலத்தில் எழுந்தருளி என்ன அலங்காரத்தில் காட்சி தருகிறாள் என்பதற்கு தனிச்சிறப்பு உண்டு. அம்பிகை ஆதிசக்தியின் ரூபத்தில் அருள்புரியக் கூடியவள் தான்.

ஆனால் அந்த அம்பிகை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி ரூபத்திலும் மாறி அருள்புரிகிறாள். அப்படின்னா ஒரு சில ஆலயங்களில் தான் இந்த மாதிரி அபூர்வமான தரிசனங்கள் அமையும். ஒவ்வொரு நாளும் அன்னை மீனாட்சி 8 வடிவமான ரூபத்தில் 8 வகையான சக்திகளின் கோலத்தில் காட்சி தருகிறாள்.

ஒவ்வொரு கோலத்திலும் வழிபாடு செய்கிற போது ஒவ்வொரு வகையான பலன்கள் உண்டு. முதல்ல பள்ளியறையில் இருந்து எழுப்பும் போது மகாசோடசி என்ற சக்தி ரூபினியாகக் காட்சி தருகிறாள். அப்புறம் பிராதசந்தி காலத்துல அம்பாள் பாலா என்கிற சக்தி ரூபினியாகக் காட்சி தருகிறாள். அப்புறம் 6ல் இருந்து 8 நாழிகையில் அம்பாள் புவனேஷ்வரியாகவும், 12ல் இருந்து 15 நாழிகையில் அம்பாள் கௌரியாகக் காட்சி தருகிறாள்.

மத்தியானம் அம்பாள் ஷியாமளா என்கிற ரூபினியாகக் காட்சி தருகிறாள். சாயரட்சையில் மாதங்கியாகவும், அர்த்தஜாமத்தில் பஞ்சதசிங்கற தேவியின் ரூபமாகவும் அருள்புரிகிறாள். பள்ளியறைக்கு திரும்ப போகும்போது சோடசிங்கற ரூபினியாகக் காட்சி தருகிறாள்.

ஒரே நாளில் 8 வகையான ரூபினியாக அருள் செய்ய முடியும்னா அது அம்மா மீனாட்சியாக மட்டும்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன் என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி.