போக்கும் வரவும் இல்லா புண்ணியவான் யார்..? மதம் பிடித்த யானையைக் கொன்ற கண்ணன்…!

Published:

நாம் பிறவிகளில் அரிய பிறவியாக மனிதனாகப் பிறந்து விட்டோம். இது கடவுள் கொடுத்த வரம். இனி நாம் நற்கதி அடைவதும் அடையாததும் நம் கையில் தான் உள்ளது.

இனி அந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக இன்றைய மார்கழி 25 (9.1.2023)ம் நாளில் திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவைப் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

திருப்பள்ளியெழுச்சியின் 5ம் நாள் பாடல். பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் என்று தொடங்குகிறது இன்றைய பாடல்.

Markali 25
Markali 25

இந்தப் பாடலில் பூத உடல்களில் உள்ள எல்லா ஆத்மாக்களிலும் இறைவன் நிரம்பியிருக்கிறார். இறைவனுக்குப் போக்கும் வரவும் கிடையாது. பஞ்சபூதங்களாக நிற்கக் கூடியவர் இறைவன். சிவபுராணத்திலும் போக்கும் வரவும் இல்லா புண்ணியனே என்று குறிப்பிடப்படுகிறது. இதையும் மாணிக்கவாசகர் தான் சொல்லி இருக்கிறார்.

பிறவிப்பெருங்கடலைத் தான் போக்கு, வரவாக சொல்கிறோம். பிறவியற்றவர் ஆதலால் போக்கும் வரவும் இல்லாதவர் என்று குறிப்பிடப்படுகிறது. பிறவிகளில் மானுடப்பிறவியே கடவுள் கொடுத்த வரம்.

இதில் தான் பிறவி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வேண்டாம் என்றாலும் நிறுத்திக் கொள்ளலாம். யாரிடம் பிறவி இல்லா நிலையைத் தா என்று கேட்பது என்ற சிந்தனை எழலாம். இதற்கு பிறவி இல்லாத நிலையை உடையவரிடம் தான் கேட்க வேண்டும்.

உன்னை நாங்கள்லாம் வந்து வழிபடுறோம். உன்னை நாங்க பார்த்து கிடையாது. கைலை மலையில் எப்படி இருப்பன்னும் தெரியாது. உன் ரூபம் என்னன்னு தெரியாது. ஏதோ எங்களுக்குத் தெரிஞ்ச வகையில நாங்க ஆடி பாடி வழிபடுறோம். எங்களுக்கு வந்து அருள் செய் என இந்தப் பாடலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

திருப்பாவையின் இன்றைய பாடலில் ஆண்டாள் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் என்று ஆரம்பிக்கிறார்.

Thiruppavai 25
Thiruppavai 25

இந்தப்பாடலில் முழுக்க முழுக்க கண்ணனின் அவதாரம் பற்றித் தான் சொல்கிறார். கண்ணன் சிறையில் அவதாரம் செய்தார். வசுதேவருக்கும் தேவகிக்கும் 8வது மகனாக அவதரிக்கிறார். சிறைச்சாலையில் தான் இருக்கிறார். இந்தக் குழந்தையும் கம்சன் கொன்று விடுவானே என்ற பயத்தில் இருக்கிறார்.

அப்போது வசுதேவரே கவலை வேண்டாம். ஆயர்பாடியில் மாயை என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். இந்த ஆண் குழந்தையை அங்கு விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை எடுத்து வாருங்கள் என்கிறது. இரவில் ஒரு கூடையில் குழந்தையை வைத்து சிறையருகே வருகிறார். அப்போது சிறைக்கதவு தானாகவே திறக்கிறது. வெளியில் வந்தால் அடை மழை.

அப்போது 5 தலை நாகம் வந்து இவர்களுக்குக் குடைபிடிக்கிறது. அப்போது ஒரு ஆறு குறுக்கிட இதை எப்படிக் கடப்பது என்று பார்க்கிறார். அந்த ஆறு இவருக்கு தானே வழிவிடுகிறது. இப்படியே அண்டசராசரமும் இவருக்குக் கட்டுப்பட ஆயர்பாடியை வந்து அடைகிறார்.

அங்கு சென்றால் மாயை வந்து பிறந்ததால் எல்லோரும் மயக்கத்தில் இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து இந்த ஆண் குழந்தையை அங்கு விட்டுவிட்டு அந்தப் பெண் குழந்தையை எடுத்து வருகிறார் வசுதேவர்.

இதைக் கம்சன் பார்த்தான். இப்பப் பிறந்துருக்குற குழந்தை தானே என்னைக் கொல்லும்னு அசரீரி வந்தது. இந்தக் குழந்தையை நான் கொல்கிறேன் பார் என்று சொல்லி அந்தக் குழந்தையை அழிக்க முயற்சித்தான்.

குழந்தை பேருருவம் கொண்டது. டேய் கம்சா என்னைக் கொல்ல உன்னால் முடியாது. உன்னைக் கொல்ல எங்க அண்ணன் அவதரித்து விட்டான் என்று சொல்லி மறைந்து போனது. என்னைக் கொல்லவும் குழந்தை பிறந்துள்ளதா என அதை அழிக்க பல அசுரர்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். ஆனால் எத்தனை அசுரர்கள் வந்தாலும் அவர்களை எல்லாம் அழித்து கடைசியின் தன்னை எதிர்க்கும் கம்சனையும் அழிக்கிறார்.

Demon elephant and Srikrishna
Kuvalaiya peedam elephant and Srikrishna

பல திருவிளையாடல்கள் செய்து ஆயர்பாடியில் வளர்ந்து வருகிறார் கிருஷ்ணர். இதற்கிடையில் அக்ரூவர் வந்து அழைக்கக் கம்சன் நடத்தும் தனுர் யாகத்தில் மதம் பிடித்த குவளையாபீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்துக் கொன்று கம்சனையும் கொன்று உக்கிரமசேனன் மன்னனுக்கு முடிசூட்டுவிழாவை நடத்துகிறார்.

பின்னர் பல அரிய பெரிய நிகழ்வுகளை எல்லாம் கிருஷ்ணபரமாத்மா நடத்திக் காட்டியுள்ளார் என இந்தப் பாடலில் சொல்லப்படுகிறது.

கண்ண பரமாத்மா தான் வந்த காரியத்தை சிறப்பாக செய்து வரும் பெருமாளே நாங்கள் உங்களை பணிந்து வணங்க வந்து இருக்கிறோம். எங்களுக்கும் வந்து அருள வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறார்.

 

 

மேலும் உங்களுக்காக...