சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!

Published:

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. வருடம் முழுவதும் பூஜை செய்து பெறக்கூடிய பலனை இந்த ஒரே நாளில் நம்மால் பெற முடியும்.

முதலில் இரவு முழுவதும் விழித்து இருந்தால் மிகச்சிறப்பு. முடிந்தவரை 3வது கால பூஜை வரையாவது கண் விழித்து இருங்கள்.

பொதுவாக சிவராத்திரி 4 கால பூஜை. இரவு 7.30 மணி, 10.30 மணி, இரவு 12 மணி, விடியற்காலை 4.30 மணி என 4 கால பூஜைகள் அன்றைய தினம் நடக்கின்றன. ஒவ்வொரு பூஜை காலத்துக்கும் ஒவ்வொரு சிறப்புப் பலன் உண்டு.

லிங்கமாக வைத்து இருந்தால் எப்படி பூஜை செய்வது என்று பார்க்கலாம். அபிஷேகத்திற்கு முதலில் பால் பொருள்களைக் கொண்டு பண்ண வேண்டும். பால், தயிர், நெய் ஆகியவற்றைக் கொண்டே முதலில் அபிஷேகம் பண்ண வேண்டும்.

தொடர்ந்து தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பழங்கள் என அபிஷேகம் பண்ணலாம். படங்களாக இருந்தால் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை பண்ணலாம். வில்வ இலைகள் பூஜையில் மிகமிக முக்கியம். ரொம்ப குறைந்த அளவிலாவது பூஜையில் வில்வ இலைகள் வைக்க வேண்டும். அதுதான் சிவனுக்கு மிகவும் பிடித்த மலர்.

Lord Shiva
Lord Shiva

வெண்பொங்கல் நைவேத்தியமாக வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இல்லாவிட்டால் பழங்கள். உலர் பழங்கள். உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரின்னு ஏதாவது ஒன்றை வைக்கலாம். முடிந்தால் இனிப்புப் பொருள்கள் செய்யலாம்.

MS
MS

சர்க்கரைப் பொங்கல், பாயாசம், கற்கண்டு சாதம், கேசரி என ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைக்கலாம். அடுத்தாற்போல் தூப தீபம் காட்டி, கற்பூரம் ஏத்தி உங்கள் வேண்டுகோளை சொல்லி சாமி கும்பிடலாம்.

இரவு முழுவதும் விழித்திருக்க திருவாசகம், சிவபுராணம் படிக்கலாம். இல்லாவிட்டால் மொபைலில் வைத்து கேட்கலாம். விழித்திருக்கும் போது நம்மை அறியாமலேயே தூக்கம் வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன் வில்வ மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து இரைக்காகக் காத்திருந்தான்.

Vedan
Vedan

அப்போது அவன் கைகள் மரத்தில் பட்டு சில வில்வ இலைகளும், அவன் குடிக்க வைத்திருந்த தண்ணீர் கீழே சிந்தி மரத்தடியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பட்டது. அதை சிவன் ஏற்றுக்கொண்டு அவருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தாராம்.

அவன் மரத்தின் மீது கண்விழித்து அமர்ந்த நாள் சிவராத்திரி. அதுவே அவனுக்குத் தெரியாதாம். தெரியாமலேயே இருந்து தெரியாமலேயே நடந்த ஒரு பூஜையையே இறைவன் மனமார ஏற்றுக் கொண்டு அருள்புரிந்துள்ளார்.

Shiva
Shiva

எல்லாம் தெரிந்து முறைப்படி சிவராத்திரி அன்று கண்விழித்து விரதம் இருந்து பக்தியொழுக பாடல் பாடியும், புராணங்கள் படித்தும் வரும் பக்தனுக்கு எப்படி அருள்புரிவார் என்று எண்ணிப்பாருங்கள். அதனால் இந்த சிவராத்திரியை தவறவிடாமல் 4 கால பூஜையையும் கண்டு களித்து இறைவன் அருள் பெற்று எல்லோரும் இன்புற்று இருங்கள்.

இந்த இனிய நாள் வரும் சனிக்கிழமை அன்று (18.2.2023) வருகிறது. அனைவரும் ஒரு அற்புதமான ஆன்மிக அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

 

மேலும் உங்களுக்காக...