சிவராத்திரி அன்று இரவு கண்விழிப்பதன் உண்மை அறிவியல் இதுதானா…?! அப்படின்னா கட்டாயம் விழித்துக் கொள்ளுங்கள்..!

Published:

சிவ விரதங்கள் பல இருந்தாலும் முக்கியமானது சிவராத்திரி. ராத்திரி என்பது இருள் காலம். சர்வசம்ஹார காலம், ஊழி காலம், பிரளயகாலம் எல்லாம் ஒன்று தான். பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை இறுக மூடிக்கொள்ள உயிரினங்கள் எல்லாம் இருளில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது.

இதை உணர்ந்த இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து வரும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் உயிரினங்கள் தவிக்கின்றன. இது தான் ஊழி காலம். உடனே உலகம் முழுவதும் அழிந்து போய் விடுகிறது.

Siva333
Siva

திரும்பவும் உயிரினங்களைப் படைத்து உலகை இயக்க வேண்டும் என பார்வதி தேவி சிவனை தரிசித்து விரதம் இருந்து பூஜிக்கிறாள். அந்த இரவு தான் சிவராத்திரி.

பேரிருளில் தனித்து இருப்பவர் சிவன். அந்த இரவை சிவராத்திரி என்பர். ராத்திரி என்றால் பூஜித்தல். சிவனை பூஜிக்கத் தகுந்த இரவு. சிவ விரத நாள்களுக்குள் தலையாயது மகாசிவராத்திரி.

மகாசிவராத்திரி கற்பம் என்ற நூலில் சிவராத்திரி பற்றி அற்புதமாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. மறைஞான சம்பந்தர் எழுதியது. 39 குறள்பாக்களால் ஆனது.

இன்று இரவு முழுவதும் சிவபெருமானை வேண்டினால் சகல சம்பத்துகளும் கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் பிறப்பில்லா பெரும்பேறு அடைவர் என மகாசிவராத்திரி புராணம் கூறுகிறது. ஏழேழு தலைமுறைக்கும் நற்கதி கிடைக்கும் என்றும் சொல்கிறது. எமனே அத்தகைய சிவனடியாரைக் கண்டு அஞ்சுவாராம்.

Meditation
Meditation

மாசி மாதம் வரும் சிவராத்திரிக்கு என்ன பெருமை என கேட்கலாம். இந்த நாளில் பூமியின் வட அரைகோளத்தில் இருந்து ஒரு அபரிமிதமான சக்தி மேல் நோக்கி செல்கிறது. இந்த நாளில் முதுகுத்தடம் மேலாக உள்ள உயிரினங்கள் (மனிதர்கள்) இந்த சக்தியைக் கொண்டு பயன்பெறலாம்.

இந்த மகாசக்தியானது நம் உடலிலும் மேல் நோக்கிப்பாயும் ஆற்றல் வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் நெற்றியில் உள்ள 3வது கண் திறக்கவும் வாய்ப்பு அதிகம். இதன் மூலம் உடலில் உள்ள சக்கரங்கள் எல்லாம் சூப்பராக வேலை செய்கின்றன.தியானத்தில் இந்த இரவு முழுக்க முதுகுத்தடத்தை நேராக வைத்தால் ஆன்மிகத்தின் அடுத்த நிலையை அடையவும் இது பேருதவியாக அமையும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாசிவராத்திரி இன்று (18.02.2023) இரவு ஆரம்பித்து நாளை காலை வரை தொடர்கிறது. அற்புதமான இந்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாய்ப்பு என்பது கிடைக்கும்போதெல்லாம் நல்லமுறையில் பயன்படுத்துவதற்காகத் தான் வருகிறது. நாமும் பயன்படுத்தி வாழ்வில் நல்ல ஒரு உயரிய நிலையை அடைவோம்.

அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துகள்.

மேலும் உங்களுக்காக...