நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வாங்க. அதுல முக்கியமான உறுப்பு கண். இதை வைத்து தான் உலகையே பார்க்க முடிகிறது. ஒரு நிமிடம் கண்ணை மூடினால் தான் கண் பார்வை இல்லன்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியும். சிவபெருமானின் நெருங்கிய நண்பர் சுந்தரமூர்த்தி நாயனார். சிவபெருமான் சுந்தரருக்காக பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்து இருந்தார். அப்படி ஒரு சம்பவம் தான் இது.
சங்கிலியாரை திருமணம் செய்து கொள்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். ஏற்கனவே பரவையாரை திருமணம் செய்தவர். இனி நான் பரவையாரை நாடிச் செல்ல மாட்டேன். சங்கிலியாரைப் பிரிய மாட்டேன் என்று ஒரு சத்தியத்தை செய்து விட்டு சங்கிலியாரைத் திருமணம் செய்து கொள்கின்றார்.
சில நாள்களில் தியாகராஜர் ஞாபகம் வந்து விட்டது. ஆரூராரைப் பார்க்கணும்; என்று இறைவன் மீது காதல் வந்து விட்டது. அதனால் சத்தியம் பெரிதாகத் தோணல. இறைவன் மீது வைத்த காதல் தான் ரொம்ப பெரிசு. அதனால இறைவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி எல்லைத் தாண்டி காலெடுத்து வைத்தார்.
இறைவன் அதற்குத் தண்டனையாக ரெண்டு கண்களையும் அகற்றி விட்டார். என்னைக் காணனும்னு தானே வந்தே. காண வேண்டிய கண்கள் இல்லன்னா என்ன பண்ணுவ? அப்படின்னா சத்தியம் எவ்வளவு உயர்ந்தது என்பதை உன் மூலமாக உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்றார்.
எங்கெங்கோ அவர் தடுக்கி விழுகிறார். சுவாமி அவருக்கு கோல் ஒன்று கொடுத்தார். இதெல்லாம் போதாது. எனக்கு கண்ணைக் கொடுன்னு சண்டை போடுகிறார். சத்தியம் தான் பெரிசுன்னு இறைவன் விடாப்பிடியாக இருக்கிறார். ஒரு வழியாக காஞ்சிபுரம் வந்து சேர்ந்து காமாட்சி தாயிடம் முறையிடுகிறார்.
அதற்காக ஒரு பதிகம் பாடுகிறார். அவரும் அவரது பங்காக இடது கண்ணைத் தருகிறார். மற்றதை நீ சுவாமியிடம் கேட்டுக்கொள் என்றார். அதன் பிறகு ஆரூர் போகிறார். இதன்பிறகு ஒரு பதிகம் பாடுகிறார். வலது கண்ணையும் பெறுகிறார். கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பதிகங்களைப் பாராயணம் செய்யலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



