மனிதன் வாழும்போது யாருக்கும் எந்தத் தொல்லையும் தரக்கூடாது. அப்போது தான் அவனது இறுதிநாள்கள் கஷ்டங்கள் இல்லாமல் இலகுவாக இருக்கும். சிலரைப் பார்த்தால் 80 வயது, 90 வயது ஏன் 100 வயதுன்னு கூட சொல்வாங்க. ஆனால் அவர்களைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். என்னடா இப்படி இருக்காங்க… அதுவும் இந்த வயசிலன்னு தோணும்.
இசைஞானி இளையராஜா, ரஜினிகாந்த் எல்லாம் பாருங்க. இந்த வயதிலும் இன்னும் இளைஞர் மாதிரி பரபரப்பா வேலை செய்றாங்க. ஆனால் சிலர் 60ஐத் தாண்டினாலே அவ்ளோதான். நம்ம கதை முடிஞ்சிப் போச்சுன்னு நினைக்கிறாங்க. இன்னைக்கு உள்ள காலகட்டத்துல குடும்பத்துல யாரும் யாரு கூடவும் அன்பாக இல்லை. அப்படி குடும்பத்துக்குள்ளேயே இருந்தால் மற்றவங்க கூட எப்படி இருக்க முடியும்?
எல்லாரும் பணம் பணம்னு தான் அதுகூடவே ஓடுறாங்க. எந்திரவாழ்க்கை வாழ்றாங்க. அப்புறம் யாரு கூடவும் பேச நேரமில்லை. ஆனால் மொபைல்ல மட்டும் நிறைய பேசுறாங்க. இப்படி இருந்தா உறவுகள் எப்படி பலப்படும்? அப்புறம் பிள்ளைகளுக்கு எப்படி பெற்றோர்கள் மேல பாசம் வரும். ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரமாவது அவர்களுக்காக ஒதுக்கி பேசிப் பழக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் கொஞ்சம் ஆசாபாசம் வரும். சரி. விஷயத்துக்கு வருவோம்.
சிவ சிவ என்று சொல்லும்போதே உயிர் போய்விட வேண்டும் என்பார்கள். அவர்கள் எல்லாருமே சிவபக்தர்கள், சிவனடியார்களாக இருப்பார்கள். அவர்களது உயிரானது கடைசியில் சிவபெருமானின் திருவடியைப் போய்ச் சேர வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கும்.
சேர்த்து வைத்த சொத்து சுகம் எல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. பிள்ளைகள் கூட யாரும் உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசிக்கும்போது அவர் எதிர்காலத்தில் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்பதே உண்மை. இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் தேடிக் கோயில் கோயிலாகச் செல்லுங்கள். அப்படி சென்றால் இறுதிகாலம் முழுவதும் சிவபெருமான் நிச்சயம் துணை இருப்பார்.