சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?

சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…

lord bairava, shiva

சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது.

சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5 முகங்களும் உள்ளது. இந்த ஐந்து முகங்களும் சிவ பெருமானின் படைத்தல், காத்தல் அருளல், மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்து விதமான தொழில்களை குறிக்கிறது.

சிவபெருமானுக்கு ஈசான முகம், தத்புருஷம், அகோரம், வாமதேவர், சத்யோஜாத முகம் என 5 முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்தில் இருந்தும் கீழ்க்கண்டவாறு 25 முகங்கள் உண்டு. என்னன்னு பாருங்க.

சிவபெருமானின் 5 முகங்கள்:
ஈசான முகம், தத்புருஷ முகம், அகோர முகம், வாமதேவ முகம், சத்யோஜாத முகம். ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராசர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் என 5 வடிவங்களும், தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுராரி என 5 வடிவங்களும், அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நீலகண்டர் என 5 வடிவங்களும், வாமதேவ முகத்திலிருந்து கங்காதரர், சக்ரவரதர், கஜாந்திகர், சண்டேசானுக்கிரகர், ஏகபாதர். என 5 வடிவங்களும், சத்யோஜாத முகத்தில் இருந்து  லிங்கோத்பவர், சுகாசனர், உமாமகேசர், அரிஹரர், அர்த்தநாரி என 5 வடிவங்களும் தோன்றின

மேற்கண்ட 25 முகங்களும் வெவ்வேறு பலன்கள் தருபவை. சிவபெருமானுக்கு இந்த 25 முகங்கள் மட்டும்தானா என்றால் இல்லை. பைரவர் உள்பட 64 வடிவங்களிலும் சிவன் காட்சி அளிக்கிறாராம். உலகின் தலைவனாக இருப்பவர் அவர். அதனாலேயே அனைத்து வடிவங்களாகவும் இயங்கி பக்தர்களைக் காத்து வருகிறார்.