உலகின் முன்னணி நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தங்களுடைய 3 ஸ்டுடியோக்களை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.
Monolith Productions, Player First Games மற்றும் Warner Bros. San Diego ஆகிய 3 ஸ்டுடியோக்களும் மூடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் ரசித்து விளையாடி ’வொண்டர் வுமன்’ கேம் முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்து வார்னர் பிரதர்ஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: “நாங்கள் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. எங்கள் முக்கியமான பிராண்டுகளான Harry Potter, Mortal Kombat, DC, Game of Thrones ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக Monolith Productions, Player First Games, Warner Bros. Games San Diego ஆகிய மூன்று ஸ்டுடியோக்களை மூடுவதற்கான முடிவை எடுத்து உள்ளோம்.
Monolith Productions கடந்த காலங்களில் சிறந்த கேம்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.