எந்த ஒரு பூஜையை செய்வதாக இருந்தாலும் எந்த ஒரு வழிபாட்டை மேற்கொள்வதாக இருந்தாலும் எப்படி முதலில் விநாயகரை வழிபடுகிறோமோ அதே போல் விநாயகருக்கு அடுத்தபடியாக குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த பூஜையும், வழிபாடும் சிறப்பாக நடைபெறும். மேலும் அந்த பூஜை, வழிப்பாட்டிற்குரிய பலனையும் நம்மால் முழுமையாக பெற முடியும்.
அமாவாசை தினத்தில் குலதெய்வ ஆலயத்திற்கு செல்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி வழிபாடு செய்வதற்கு முன்பாக குலதெய்வ கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக கையில் புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து 3 எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
கோவிலுக்குள் நுழைந்ததும் பலிபீடம் இருக்கும். கொடி மரத்திற்கு முன்பாக பலிபீடம் இருக்கும். அந்த பலிபீடத்தின் மேல் இந்த 3 எலுமிச்சம் பழங்களையும் வைத்து விடுங்கள். பிறகு எப்பொழுதும் போல் கோவிலுக்குள் சென்று உங்களுடைய குலதெய்வத்தை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டுமோ அந்த முறையில் வழிபாடு செய்து கொள்ளுங்கள். அனைத்தையும் நிறைவு செய்த பிறகு உங்களுடைய குலதெய்வத்தை 9 முறை வலம் வர வேண்டும்.
இப்படி வலம் வந்த பிறகு பலிபீடத்தின் மேல் வைத்த இந்த 3 எலுமிச்சம் பழங்களையும் திரும்ப எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து உப்பு சர்க்கரை எதுவும் சேர்க்காமல் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பருக வேண்டும்.
மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்காக நறுக்கி குங்குமத்தை தடவி நம்முடைய வீட்டை திருஷ்டி சுற்றுவது போல் சுத்தி போட்டு விட வேண்டும். மூன்றாவது எலுமிச்சம் பழத்தை சாற்றை பிழிந்து தண்ணீருடன் கலந்து வீடு முழுவதும் தெறித்து விட வேண்டும். குறிப்பாக கதவுகளின் பின்புறத்திலும் மூலை, முடுக்குகளிலும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். அதோடு குலதெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த முறையில் வழிபாடு செய்து பரிகாரம் செய்ய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும்