வந்தாச்சு கிருஷ்ண ஜெயந்தி…வழிபடும் முறைகளும், கட்டாயம் வைக்க வேண்டிய நெய்வேத்யங்களும்…

Published:

Krishna Jeyanthi: இந்து மதத்தில் மும்மூர்த்திகளாக கருதப்படுவது மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பிரம்மன் ஆகும். இந்த மும்மூர்த்திகளில் அவதாரங்கள் எடுத்து பக்தர்களை காத்தவர் மகாவிஷ்ணு. அப்படி மகாவிஷ்ணு எடுத்த முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணன் அவதரித்த தினத்தை தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். இதை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர்.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆனது ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கட்கிழமை நிகழ்கிறது. அன்றைய தினம் திருமண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர் விரதம் இருந்து வழிபட்டால் உடனே நினைத்தது கை கூடும். கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் குழந்தை கிருஷ்ணரின் பாதம் போல் வரைந்து வழிபட்டால் நம் வீட்டிற்கே கிருஷ்ணர் வந்து அருளாசி வழங்குவார் என்பது ஐதீகம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதற்கு காலை நேரத்தை விட மாலை நேரமே உகந்ததாக கருதப்படுகிறது. வீட்டை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு முதலில் அரிசி மாவில் வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணனின் பாதங்களை வரைய வேண்டும். பின்னர் விளக்கேற்றி குழந்தை கிருஷ்ணருக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை படையலில் வைக்க வேண்டும்.

குழந்தை கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பலகாரங்கள் என்னவென்றால் வெண்ணெய், நெய், பால், தயிர், முறுக்கு, தட்டை, சீடை, அதிரசம், பாயாசம் போன்றவைகள் ஆகும். அதிலும் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பண்டம் என்றால் அவல். அதனால் அவலில் பாயாசம் செய்து வைத்தால் மிகச் சிறப்பு.

பலகாரங்கள், பழ வகைகள் அனைத்தையும் படையலில் வைத்துவிட்டு விளக்கு ஏற்றி கிருஷ்ணர் துதிகளையும், கிருஷ்ண அஷ்டோகத்தையும் கிருஷ்ண மந்திரத்தையும் படித்து மனம் உருகி வேண்டி பூஜை செய்ய வேண்டும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் குழந்தை கிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வைத்து வேண்டி பூஜை செய்துவிட்டு, பூஜை முடிந்த பின்பு அந்த பலங்காரங்களை நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கும் தங்கள் கையால் ஊட்டி விட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மேலும் உங்களுக்காக...