கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா…
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன்
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம். இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது. இந்த சுடு ( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
குளிர்ச்சி தேவை இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள் ஆம். லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது. இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நனையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம் சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.