வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை…

karadaiyan nonbu

மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை இருக்கலாம். இதற்கு இன்னொரு பெயர் சாவித்திரி நோன்பு.

சாவித்திரி தனது கணவரான சத்தியவானை எமனிடம் இருந்து மீட்டாராம். அப்போது சாவித்திரி மேற்கொண்ட விரதம்தான் காரடையான் நோன்பு. காட்டில் இந்த விரதம் இருக்கும் சாவித்திரி தன் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பராசக்தியிடம் பிரார்த்தனை செய்கிறாள். அப்போது சாவித்திரி காட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து கார அடையைத் தயார் செய்து கடவுளுக்குப் படைக்கிறாள்.

அதனால்தான் இந்த நோன்புக்கு காரடையான் நோன்பு என்று பெயர் வந்தது. இந்த நாளில் திருமணம் ஆன பெண்கள் தங்களது கணவரின் நீண்ட ஆயுளுக்காக தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம். மஞ்சள் நிற நோன்பு கயிற்றைக் கைகளில் கட்டிக்கொண்ட விரதம் இருப்பார்கள். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்த விரதத்தை இருக்க வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் வரும் 14ம் தேதி வருகிறது. அன்றைய தினம் சூரிய உதயம் காலை 6.40மணிக்குத் தொடங்குகிறது.

அதே போல அஸ்தமனம் மாலை 6.31க்கு முடிகிறது. இந்தக் காலகட்டத்தில் பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. தாலி சரடை மாற்ற உகந்த நேரம் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை. வீட்டில் கணவர்கள் இருந்தால் அவர்களை வைத்து தாலிச்சரடை மாற்றிக் கொள்ளலாம். பின்னர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கலாம். கார அடையை அரிசி மாவு, தேங்காய், காராமணி, உப்பு, எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, பெருங்காயம் கலந்து கார அடை செய்யலாம்.