கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார விரதத்தைப் பற்றிப் பார்ப்போம்.
17.11.2023 முதல் 16.12.2023 வரை கார்த்திகை மாதம் உள்ளது.
இந்த மாதம் 5 சோம வாரங்கள் உள்ளன. சோம வார விரதங்கள் கார்த்திகை மாதம் வாரம் தோறும் திங்கள்கிழமை வருகிறது. 20.11.2023, 27.11.2023, 04.12.2023, 11.12.2023, 18.12.2023 என 5 சோம வார விரதங்கள் உள்ளன.
நினைத்த காரியத்தை நடக்கவே நடக்காது என்று சொல்லும் காரியம் நடக்கணும்னா நீங்க இருக்க வேண்டிய விரதம் சோமவார விரதம். இந்த விரதத்தை தெய்வங்கள், அரசர்கள், முனிவர்கள் என எல்லோரும் இருந்து பெற்றுள்ளனர்.
கல்யாணம் ஆகணும், தொழில் சிறக்கணும், நோய்கள் அண்டாமல் இருக்கணும், பிணிகள் வரக்கூடாது ஆகியவை நம் வேண்டுதல்களாக இருக்கலாம்.
பலரும் மாதந்தோறும் வரக்கூடிய திங்கள்கிழமையில் சிவபெருமானை நினைத்து இந்த விரதத்தை இருப்பர். சோமவாரம் அன்று காலையில் எழுந்து குளித்து, சிவபெருமானின் திருவுருவப்படத்தை வைத்து வணங்கலாம்.
முருகப்பெருமானின் படம் இருந்தாலும் மலர்கள் சாத்தி அலங்காரம் பண்ணி, பக்திப்பாடல்களைப் பாராயணம் பண்ணலாம். பழம், பால் நைவேத்தியமாக வைக்கலாம். பால் காய்ச்சி நாட்டுச்சர்க்கரையோ, தேனோ கலந்து வைக்கலாம். வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு போதும்.
அன்று உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் ஏதாவது ஒரு பொழுது விரதம் இருங்க. காலையும், மாலையும் விரதம் இருந்து இரவில் சாப்பிடுவது நல்லது. தண்ணீர் நல்லா குடிங்க. சற்கோண தீபம், நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை உள்ளன்போடு பிரார்த்தனை பண்ணுங்க.
சிவபெருமானுக்கு உரிய பதிகங்களைப் பாராயணம் பண்ணி, என்ன நினைச்சி இந்த விரதம் இருக்கிறீர்களோ அது நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். விரதம் பூர்த்தி செய்கிறபோது முழு சாப்பாடு அல்லது இனிப்பு பாயாசம், சர்க்கரைப் பொங்கல் அல்லது பழங்கள் வைத்து நைவேத்தியம் வைக்கலாம்.
அன்னதானம் இன்றைய தினத்தில் செய்வது மிக மிக சிறப்பு. இது எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும். பொதுவாக அன்னதானம் பல வினைகளைக் குறைக்கும். விரதம் இல்லாதவர்கள் கூட யாருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம்.
இப்படி செய்துவரும் போது கடவுள் நிச்சயமாக நம் வாழ்க்கையை உயர்த்துவார்.