உடன்பிறந்தோருக்காக இன்று வழிபடலாம்… அதிவிசேஷமான கருட பஞ்சமி இன்றுதான்… மறந்துடாதீங்க..!

Published:

நாகசதுர்த்தி, கருட பஞ்சமியில் வரும் நாள்கள் நாகதோஷத்தைப் போக்கி நாம் வழிபட வேண்டிய அற்புதமான நாள்.

கருட பஞ்சமியை நாக பஞ்சமி என்றும் சொல்வர். இன்று (21.08.2023) கருட பஞ்சமி. நேற்று நாகசதுர்த்தி. இன்று கருடன் பிறந்த நாள். பெருமாளுக்கு வாகனம், கொடி இவர் தான்.

Karudan 1
Karudan

அரசமரத்துக்கு அடியில் நாகருடைய சிலையை வைத்து வழிபடுவது ஒரு நீண்ட வரலாற்று வழிபாடு. நமக்கு ராகு, கேது தோஷங்கள் தான் பெரியது. குழந்தைப் பேறு, திருமண தடைக்கு இந்த தோஷமே காரணம். இதற்குரிய வழிபாட்டை செய்து கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம்.

நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கிறது என்றாலும், நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தாலும், பயம் அதிகமாக இருந்தாலும் இந்த நாகசதுர்த்தி அன்று நாம் வழிபடலாம். நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாகவும், கண்திருஷ்டியைப் போக்கவும், பயணங்கள் இனியதாக அமையவும் நமக்கு உறுதுணை புரிவது கருட பஞ்சமி.

Perumal and Karudan
Perumal and Karudan

இந்த இரு நாள்களில் ஏதாவது ஒன்றில் விரதமாக இருக்கலாம். இன்று கருட பஞ்சமிக்கான வழிபாட்டு நேரம் இதுதான். தாய் ஒரு குழந்தைக்காகவும், சகோதரன் சகோதரிக்காகவும் இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உடன்பிறந்தோர் நல்லா இருக்கணும்னு வழிபட வேண்டிய நல்ல நாள் இது. இந்த பஞ்சமி இரவு 11.11 வரை இருக்கு. காலை 9.15 முதல் 10.15 வரை இந்த பூஜையை செய்து கொள்ளலாம். இல்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.

மீனாட்சி, காமாட்சி, கௌரி அம்மன் என யாரை வேண்டுமானாலும் உருவப்படமாக வைத்து வழிபடலாம். கருடனோட படம் இருந்தால் வைத்துக் கொள்ளலாம். கருடன் மேல் பெருமாள் இருக்கும் படமாக இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம். துளசியை வைத்துக் கொள்ளுங்கள்.

அம்பிகை என்றால் வாசனை மலர்கள் வையுங்கள். கொழுக்கட்டை நைவேத்தியம் விசேஷமானது. பால் கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, பால் பாயாசம் என எதை வேண்டுமானாலும் நைவேத்தியமாக வைத்துக் கொள்ளலாம்.

அர்ச்சனை மலர்களில் துளசி முக்கியம். கௌரி அம்பிகையை வைத்து வழிபடும் போது அற்புதமான பலன்கள் நமக்குக் கிடைக்கிறது. இந்த நாளில் சிகப்பு கயிற்றால் சரடைக் கட்டிக் கொள்ளலாம். இந்தக் கயிற்றை 10 முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

Gowri Amman
Gowri Amman

வழிபடுகையில் அம்பிகைக்கு வலப்பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை முடிந்ததும் இந்தக் கயிற்றை வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள். நோய் நீங்கும். பயம் போகும். கண்திருஷ்டிக்கு இது நல்ல பரிகாரம்.

அம்பிகை, நாராயணர், கருடன் இவர்களுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுங்கள்.

 

மேலும் உங்களுக்காக...