லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் வர வேண்டுமா? அப்படின்னா நாளைக்கு மறக்காம இதைச் செய்யுங்க…!!!

Published:

பொதுவாக தமிழ் மாதங்களில் கடைசி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். அதிலும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் நீங்கும்.

வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமிக்கு உகந்த நாள். ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாளை வரக்கூடிய கடைசி வெள்ளிக்கிழமை (10.2.2023) அன்று மகாலட்சுமியை வழிபடுவது எப்படி என்று பார்ப்போம்.

முந்தைய நாளான வியாழக்கிழமையே வீட்டைக் கழுவி பூஜை சாமான்களை சுத்தம் செய்து வைங்க. விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்ளுங்க. மறுநாள் காலை எழுந்ததும் வாசலை கூட்டிப் பெருக்கி பசுஞ்சாணம் தெளித்து மாக்கோலம் போடுங்க. பசுஞ்சாணம் கிடைக்கலன்னா மஞ்சள் நீரைத் தெளிங்க. குறிப்பாக மாக்கோலம் போடணும். பச்சரிசி மாவுல கோலம் போடுறது தான் நல்லது.

Maakkolam
Maakkolam

மாக்கோலம் இடுவது என்பது மகாலெட்சுமியை வீட்டுக்குள் வர வைக்கும் அற்புதமான வழி. பூஜை அறை மற்றும் கடவுள் படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். வாசனை நிறைந்த பூக்களை சாமி படங்களுக்கு வைங்க. வாசனை நிறைந்த பூக்களாக இருந்தால் மகாலெட்சுமி விரும்பி வாசம் செய்வாங்க.

Mahalakshmi Elakkai
Mahalakshmi Elakkai

மகாலெட்சுமிக்கு ஏலக்காய் மாலை அல்லது கிராம்பு மாலை போடலாம். கிராம்பைப் பூக்கட்டுவது போல தான் கட்ட வேண்டும். கோர்க்க முடியாது. விஷ்ணுக்கு துளசி மாலை, சிவனுக்கு வில்வ மாலை, பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை, பூஜை அறையில் உள்ள பஞ்சபாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் நான்கைந்து துளசி இலைகளைப் போடுங்க. கொஞ்சம் பச்சைக் கற்பூரம், இடித்த ஏலக்காயைக் கொஞ்சமாக எடுத்துத் தூவி விடுங்கள்.

இவை யாவும் தெய்வ கடாட்சத்தைத் தர வல்லவை. அதனால் தான் இந்தப் பொருள்களை எல்லாம் நாம் தண்ணீரில் போடுகிறோம்.

பூஜை அறையில் திரிசூலம், வேல், சங்கு ஏதாவது இருந்தால் அதற்குரிய அலங்காரங்களையும், பூஜையையும் செய்ய வேண்டும். இனிப்பாக சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் வைக்கலாம்.

பச்சரிசி, வெல்லம், கல் உப்பு, மஞ்சள் கிழங்கு, துவரம்பருப்பு, ஆகியவற்றை எல்லாம் சிறுசிறு கிண்ணங்களில் நிரம்ப எடுத்து பூஜை அறையில் வைக்கலாம்.

அன்றை தினம் வெள்ளிக்கிழமை உப்பு தீபம், வெற்றிலை தீபம் மிகவும் சிறந்தது. அன்று வெற்றிலை மீது பச்சரிசியைப் பரப்பி வைத்து அதன் மேல் அகல்விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றுவது மிக மிக சிறப்பு.

வாழை இலையில் உப்பு பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து எண்ணை ஊற்றி பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது மிகவும் சிறந்த பலனைத் தரும்.இப்படி செய்தால் பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் அவை தீரும். சௌபாக்கியங்கள் கூடும்.

Kuthuvilakku lighting
Kuthuvilakku lighting

மேற்கண்ட பூஜை எல்லாம் எங்களால் செய்ய முடியாது என்பவர்கள் குத்துவிளக்காவது மலரிட்டு அலங்கரித்து ஏற்றுங்கள். 5 முகமாக இருக்க வேண்டும். நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுங்கள். நெய் ஊற்றுவது மிகவும் விசேஷம்.

தீராத கடன்கள் தீரும். நலிந்த தொழில், வியாபாரம் விருத்தி அடையும். தாமரை மலர்களை வைத்து அர்ச்சிப்பது மகாலெட்சுமிக்கு மிகவும் விசேஷம். குங்குமம், நாணயம் அர்ச்சனையும் செய்யலாம்.

மேலும் உங்களுக்காக...