மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன வெண் நகையாய்’ என்ற திருவெம்பாவைப் பாடலில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்வது நடந்து வருகிறது.
புதியவர்கள் தவறு செய்வது இயல்புதான். அதைப் பழைய அடியார்கள் அதைத் தெளிவாகச் சொல்லித்தரலாம். புதியவர்களும் தான் தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கோவிலுக்கு என்ன செய்யணும் என்பதை மறக்காமல் சொல்லிக் கொடுங்க. அதே போல ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த…’ என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் ஒரு ஆசிர்வாதப் பாடல். இறைவனை புகழ்ந்து பாடி வழிபட்டால் நமக்கும், நாம் சார்ந்து இருக்கும் உலகத்துக்கும் நல்லது. உலகமக்கள் எல்லாரும் சேர்ந்து கடவுளோடு புகழைப் பாடி மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அது நாட்டுக்கே நலம் பயக்கும் அல்லவா.
நல்லா மழை பெய்தால் அருமையான செந்நெல் விளையும். அந்த நீர் நிறைந்த வயலில் மீன்கள் துள்ளி விளையாடும். அதே போல பால் வளம் மிக்க பசுக்கள் நமக்கு கிடைக்கும். மழை சரியாகப் பொழியும்போது தேசமே செழிப்பாகிறது. இறைவனை நாம் வாழ்த்தும்போது உங்கள் தேவைகளை எல்லாம் அவர் அருளைப் பொழிவதன் மூலம் பூர்த்தி செய்வார்.
கோவிலில் நாம் பிரார்த்தனை செய்யக்கூடிய இடம் இதுதான். கோவிலில் நேராக உள்ளே சென்றால் விநாயகர் சன்னதி வருகிறது. அப்புறம் முருகன், அம்பாள், நந்தி, சிவன் என எல்லா சாமி முன்னாடியும் போய் நாம் லிஸ்ட் போட்டுக் கேட்போம். கோவிலின் கொடி மரத்தில் இருந்துதான் நாம் கோரிக்கை வைக்க வேண்டும். மற்றபடி சன்னிதானங்களில் உள்ள தெய்வத்திடம் நாம் நன்றியே சொல்ல வேண்டும்.
மாணிக்கவாசகர் கூட அதனால்தான் ‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி…’ என்று சொல்கிறார். தினமும் காலை முதல் இரவு வரை நமக்கு அரணாக இருந்து காப்பாற்றுவது இறைவன்தான். சன்னிதானத்துக்குப் போனால் கடவுளின் அலங்காரத்தை ரசித்து நன்றி சொல்லுங்கள். அந்த இடத்தில் உங்களுக்குத் தெய்வீக ஆற்றல் கிடைக்கும். அதை உங்கள் மனம் முழுவதும் நிரப்புங்கள்.
எனக்கு இப்படி உன்னை வணங்க ஒரு வாய்ப்பு கொடுத்தாயே என நன்றி சொல்லலாம். இன்ப துன்பங்களை எல்லாம் நண்பனிடம் கொட்டித் தீர்ப்பது போல இறைவனிடம் சொல்லி நன்றி தெரிவித்து வணங்குங்கள். ஒரு ஆலயத்தில் உள்ள பிரதானமான இடம் கொடி மரம். மனிதனின் முதுகுத்தண்டுக்குச் சமம். அதுதான் நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. யோக அமைப்பில் உடலையும், ஆலயத்தையும் ஒன்றாகப் பார்க்கலாம்.
யோக சாஸ்திரத்துல மேலே ஏறக்கூடிய நாசிக்காற்றை எப்படி சொல்வாங்க? குண்டலினி யோகம் நேரா போகாது. அது சுழுமுனை வழியாக வளைந்து வளைந்து போகும். இடகலை, பிங்கலை என நடுநாடி வழியாக வளைந்து போகக்கூடியது. கொடி மரத்தை நேராக ஏற்ற மாட்டார்கள். வளைத்து வளைத்துத் தான் ஏற்றுவார்கள். கொடிமரத்தின் முன்னால் பலி பீடம்னு ஒண்ணு வச்சிருப்பாங்க.
அது எதுக்குன்னா மனசுக்குள்ள கோபம், பொறாமை, ஆணவம்னு நிறைய கெட்ட விஷயங்கள் இருக்கு. அதை அங்கு பலியிட்டு விடுங்கள். கடவுளே இதை நான் விட்டுடறேன். எனக்கு இந்த விஷயம் நடக்கணும். நீ நடத்திக் கொடுன்னு இறைவன்கிட்ட பிரார்த்தனை செய்யக்கூடிய இடம் இதுதான்.
பலரும் அதைக் கண்டுக்கறதே கிடையாது. அங்கு நின்று கண்ணை மூடிக் கொண்டு வணங்கலாம். என் மனசுல ரொம்ப ஆசை உள்ளது. அதை அப்படியே குறைச்சிக்க எனக்கு அருள் கொடு. எனக்கு இது தேவை. எனக்கு வேற வழி கிடையாது. நான் உன்னையே கதின்னு நம்பி சரணடைந்து விட்டேன். என் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுன்னு கீழே விழுந்து கும்பிடுங்க. இதை முறைப்படி செய்தால் நிச்சயம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.
சின்னக் கோவில்ல பலிபீடம் இருக்கும். அங்கு நின்று உங்க பிரார்;த்தனையைத் தெரிவித்துக் கொள்ளலாம். இரண்டுமே இல்லை. வெறும் பிள்ளையார் கோவில்தான் இருக்குன்னா அங்கு நின்றும் இப்படி பிரார்த்தனை செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.