வேலை நிரந்தரமாக வேண்டுமா? அரசு வேலை கிடைக்க வேண்டுமா..? இதோ வித விதமான வழிபாடுகள்..!

Published:

உத்யோகம் தான் புருஷ லட்சணம் என்பார்கள். இப்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதித்து விட்டு வருகிறார்கள். வேலை பிடித்த வேலையாக இருக்க வேண்டும். அதற்கு கணிசமான சம்பளமும் கிடைக்க வேண்டும்.

அந்த வேலைக்கான தகுதி, உழைப்பை நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான கவனத்தை செலுத்தி அந்த வேலையைச் செய்து வரவேண்டும்.

அரசு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடாது. அதற்கான தகுதி நம்மிடம் இருக்கா? தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா? இன்டர்வியூவில் நம்மால் வெற்றி பெற முடியுமா? அதற்குத் தகுந்தாற்போன்ற பேச்சாற்றல், அறிவுநுட்பம் வேண்டும். சூழலுக்கேற்ப மதிநுட்பத்துடன் பதில் சொல்வதைத்தான் அதிகாரிகள் விரும்புவார்கள்.

doing job
doing job

நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை நிரந்தரமாகுமா என்று பலருக்கும் பயம் வரும். தகுதிகளை இன்னும் கொஞ்சம் தேவைக்கேற்ப வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் தயாராக இருந்து வேண்டும் போது அங்கு இறையருள் வந்து சேரும்.

எப்பவுமே வழிபாடு ஒரு தண்டவாளம், மற்றொன்று முயற்சி. இரு தண்டவாளமும் இருந்தால் தான் அதில் ரெயில் ஓடும்.

தினமும் நாம் அன்றாடம் பூஜையில் ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தை பாராயணம் செய்யலாம்.

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

அப்பர் பெருமான் அருளிய பதிகத்தையும் பாராயணம் செய்யலாம்.

சிந்திப் பரியன சிந்திப்
பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன முத்தி
கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை
தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ
யாறன் அடித்தலமே…

குல தெய்வ வழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். குலத்தைக் காக்கக் கூடிய தெய்வத்தை அன்றாடம் நினைப்பது மிக மிக முக்கியமானது. எந்தத் தெய்வத்தை வழிபடத் தொடங்கும் முன்பும் முதலில் குலதெய்வத்தைத் தான் வழிபட வேண்டும்.

Aanjaneyar
Aanjaneyar

எடுத்தக் காரியத்தில் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வெற்றி பெற்றவர் ஆஞ்சநேயர். அவரை வணங்கினால் நாம் நினைக்கக் கூடிய நல்ல வேலை கிடைக்கும். வேலைக்கும் சரி.

மற்ற பிரார்த்தனைகளுக்கும் வழிபடலாம். அதே போல சனீஸ்வர பகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் நல்லா இருந்தால் தான் நம் சொல் எடுபடுகிற வேலையை சனிபகவான் கொடுப்பார். தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

உளுந்து வடை, காரமான புளிசாதம் ராகு காலத்தில் கால பைரவரை 9 வாரங்கள் பூஜை பண்ணலாம். இதற்கு நல்ல பலன் கிடைக்கும். அரச மரத்துக்கு அடியில் உள்ள விநாயகப்பெருமானுக்குக் குளிர குளிர தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து 11 முறை வலம் வந்து வணங்கினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசாங்க வேலையே கிடைக்கும்.

Govt job
Govt job

ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால் தான் அரசாங்க வேலை கிடைக்கும். அன்றாடம் காலையில் சூரிய நமஸ்காரம் செய்பவருக்கு நிச்சயம் நல்ல பலனைக் கொடுப்பார். சூரியனுக்குரிய ஆதித்ய ஹிருதயம் அல்லது காயத்ரி மந்திரத்தைச் சொல்லியும் வழிபடலாம்.

மகாலெட்சுமியையும், நாராயணரையும் வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் உங்களுக்காக...