சொந்த வீடு கட்ட… சகல வாஸ்து தோஷங்களும் நீங்க ரொம்ப ரொம்ப ஈசியான வழி…!

Published:

வாஸ்து நாள் ரொம்ப முக்கியமான தினம். சொந்தவீடு, சொந்த தொழில் இல்லாதவங்களும் வாஸ்து பூஜை பண்ணலாம். இதை எப்படி பண்ணுவது என்று பார்க்கலாம்.

விருட்சத்திற்குப் பலன் அதிகம். வாஸ்து புருஷருக்காக தல விருட்சத்துக்கிட்ட போய் விளக்கேத்திப் பூஜை செய்ய வேண்டும். அரசமரம், வேப்பமரம், வன்னிமரங்களைத் தலவிருட்சமாக பார்த்திருப்போம். அந்த தலவிருட்சத்தை 11 தடவை சுற்றி வருவது விசேஷம். வாஸ்து புருஷாய நமக..ன்னு சொல்லிட்டு சுற்றி வரணும். இது நல்ல பலன்களைத் தரும்.

முடிந்ததும் 10 பேருக்கு அன்னதானம் போடலாம். இது ரொம்பவே விசேஷம். அதே போல மஞ்சள் துணியில் ஒரு காணிக்கையை முடிஞ்சு வைங்க. பகவானே வீடு கட்டிக்கிட்டு இருக்குறது நல்லபடியா முடியணும்…வீடு மட்டுமல்ல…கல்யாண மண்டபம், கடைன்னு எதுவேணாலும் வேண்டலாம்.

Pillaiyar
Pillaiyar

அதை நினைச்சிக்கிட்டு மஞ்சள் துணியில காணிக்கையை திருப்பதி ஏழுமலையானை நினைச்சி முடிச்சிப் போட்டு எடுத்து வச்சிக்கோங்க. அந்தக் காரியங்கள் வெற்றிகரமாக அமைய வாய்ப்புகள் இருக்கு. இல்லேன்னா வீட்டுக்குப் பக்கத்துல பெருமாள் கோவில் இருந்ததுன்னா அங்க போய் நல்லா பிரார்த்தனை பண்ணிக்கிறது ரொம்ப நல்லது.

வாஸ்து புருஷரான அவருக்கு தல விருட்சத்துல போய் விளக்கேத்திக் கும்பிட்டாலே பூரணமான அனுக்கிரகம் கிடைக்கும். வாஸ்து நாளில் பூஜை பண்றவங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வீடு இல்லாதவங்களுக்கு வீடு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் தருவதற்கு பகவானின் அனுக்கிரகம் கூடி வரும். வாஸ்து நாளில் பிரதட்சணம் பண்ணுவது ரொம்ப நல்ல பலன்களைத் தரும். சீக்கிரமாக வீடு கட்றது, இடம் வாங்குறது இது போன்ற விஷயங்கள் எல்லாம் நல்லபடியா நடக்கும்.

Vaasthu bhurushar
Vaasthu bhurushar

வாஸ்து என்பது பொதுவாக கட்டிடத்திற்காக நாம் செய்யப்படுகிற உயிரோட்டமான விஷயம். வாஸ்து சரியில்லைன்னா அதுக்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. பஞ்ச பூதங்களின் சரியான சேர்க்கையைத் தான் வாஸ்து சொல்கிறது. இதுல ஏதாவது ஒண்ணு சரியில்லைன்னா அங்கு பணம் தங்காது. நீரை ஒரு வீட்டுல ரொம்ப செலவு பண்ணிக்கிட்டே இருந்தா அங்கு மகாலெட்சுமி தங்க மாட்டாள்.

சிவபெருமானுடைய வியர்வைத்துளியில் இருந்து பூமிக்குக் கிடைத்த பூதம் தான் வாஸ்து புருஷர். பூமியில் யாரெல்லாம் கட்டிடம் கட்டுகிறார்களோ அவர்கள் அந்த வாஸ்து பூதத்திற்கு மரியாதை செலுத்தி ஹோமம், கடமை எல்லாம் செய்து அந்தக் கட்டிடத்தை நீண்ட நாள் சௌக்கியமாக வைக்கணும்னு வேண்டிக்கலாம்.

100க்கு 100 சதவீதம் வீடு வாஸ்துபடி இருக்காது. வீடுன்னா அதில் சில பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். ஒரு வீடு கட்டும்போதே என்ஜினீயர், மேஸ்திரி எல்லோருமே வாஸ்து படி தான் ஒவ்வொன்றையும் செய்வார்கள். வீட்டில் நல்ல அதிர்வலைகள் நிறைந்து இருக்க வேண்டும். பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபெருமான். அதனால் எவ்வித வாஸ்து தோஷமாக இருந்தாலும் சிவபெருமானைத் தரிசித்து வந்தால் அவை நீங்கிவிடும்.

Kaasmick muthra
Kasmick muthra

வீட்டில் குடியிருக்கும் பெரியவர் ஈசானிய மூலையில் அமர்ந்து கொண்டு காஸ்மிக் முத்திரையுடன் இருந்து ஜெபம் செய்து இந்த வீட்டில் ஆற்றல் அதிகமாகணும்…எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் போகணும்னு வேண்டி தியானம் பண்ண வேண்டும்.

இது நல்ல பலனைத் தரும். வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கும். எந்த வாஸ்துவா இருந்தாலும் வாசலில் பிள்ளையார் வைத்தால் அந்த வீட்டிற்கு வாஸ்து தோஷமே கிடையாது.

மேலும் உங்களுக்காக...