புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

By Sankar Velu

Published:

இன்று (29.3.2024) புனித வெள்ளி. கடவுளின் குழந்தையான இயேசு மரித்த நாள். இந்த கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

இயேசு ஒருநாள் ஜெருசேலம் என்ற நகருக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மக்களுக்கு சரியானது எது, தவறானது எது என்று பிரசங்கித்தார். அங்கு அவர் பல அற்புதங்களை செய்தார். நோய் உள்ளவர்களைக் குணப்படுத்தினார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார். இயேசு பல மக்களால் நேசிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஒரு சில எதிரிகளும் இருந்தனர். அவர்களில் ஒருவர் யூதாஸ். அவர் இயேசுவின் சீடராக இருந்தார். ஆனால் அவர் பெறும் புகழைப் பார்த்து பொறாமைப்பட்டார்.

இயேசுவை மதத்தலைவர்களிடம் ஒப்படைக்க 30 கிலோ வெள்ளித் துண்டுகளை யூதாஸ் வாங்கியிருந்தார். இது இயேசுவுக்கு முதலிலேயே தெரியும். ஒருநாள் இரவு சீடர்களுடன் உணவு அருந்திய இரவு அருந்திய இயேசு இதுதான் என் கடைசி இரவு உணவு என்றார். நான் உங்கள் அனைவரையும் விட்டு விட்டு சொர்க்கத்திற்குச் செல்வேன் என்றார்.

Good friday1
Good friday

இதைக் கேட்ட யூதாஸ் அங்கிருந்து வெளியே சென்றார். பிறகு யூதாஸ் ஒரு சில ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் வந்து இயேசுவை அழைத்துச் சென்றார். அங்கு சவுக்கால் அடித்து இயேசுவை சிலுவையைச் சுமக்கச் செய்தனர். கடைசியில் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவை சிலுவையில் அறைந்தனர். அவர் இறக்கும் வரை காத்திருந்தனர். இதுவே புனித வெள்ளி. இயேசு இறந்ததும் அவரது உடல் ஒரு வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்டது.

2 நாள் கழித்து மரியாளும், அவரது நண்பரும் கல்லறை சென்றனர். அங்கு இரு தேவதூதர்கள் தோன்றி இயேசு உயிர்த்தெழுந்து விட்டதாக சொன்னார்கள். மரியாளும், அவரது நண்பர்களும் இயேசுவின் சீடர்களுக்குத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க… உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!

மரணத்தில் இருந்து எழுந்த பிறகு இயேசு தமது சீடர்களை சந்தித்தார். இயேசு மரித்த உடலில் இருந்து உயிர்த்தெழுந்தார். அவர்கள் போய் மக்கள் எல்லாருக்கும் தெரிவித்தனர். இந்தப் புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு சென்று கொண்டாடி வருகின்றனர்.

இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் ஞாயிறு என்கின்றனர். ஈஸ்டருக்கு முந்தைய வாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புனித நாளாகவே கொண்டாடப்படுகிறது. அதன்படி, பாம் ஞாயிறு, புனித திங்கள், புனித செவ்வாய், உளவு புதன், மாண்டி வியாழன், புனித வெள்ளி, புனித சனிக்கிழமை, ஈஸ்டர் ஞாயிறு என்று புனித நாள்கள் அழைக்கப்படுகிறது.

புனித வெள்ளி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகின்றனர்.