உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!

இந்தியாவிலேயே அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எந்த மொழியில் பாடினாலும் அதைப் புரிந்து கொண்டு அந்தப் பாவத்தை அழகாகக் கொடுப்பதில் எஸ்.பி.பி.யை மிஞ்ச யாருமே கிடையாது. காதல், சோகம், பக்தி, குத்துப்பாடல் என எதுவாக இருந்தாலும் அதை நமக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் வல்லவர்.

அவர் வயதான காலத்தில் கூட குரல் நடுங்காமல் இளமையான குரலில் பாடியவர். அப்படிப்பட்டவர் கடைசியாகப் பாடிய ஒரு ஆன்மிகப் பாடல் பற்றிப் பார்ப்போம். சித்தர் பாடல் என்றும் சொல்லலாம்.

பக்திப்பாடல்கள் நிறைய வந்துள்ளன. ஆன்மிகப்பாடல்கள் குறைவு தான். எல்லாக் கடவுளும் ஒன்று தான் என்று சொல்வது தான் ஆன்மிகம். அகம் பிரம்மாஸ்மி என்பது தான். கடவுளை உனக்குள்ளேயே தேடு என்பார்கள். பக்தியை விட பல மடங்கு உயர்ந்தது ஆன்மிகம்.

இந்தப் பாட்டைத் தினமும் கேட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இது கணக்கம்பட்டி சித்தருக்காக எழுதிய பாடல். ஆன்மிகம் என்னவென்று யாருக்கும் தெரியல. காரணம் ஆண்டவன் யாருன்னு புரியல. அல்லாவும் ஈஸ்வரனும் ஒண்ணுன்னா புரியல. ஆன்மா தான் கடவுள்னா நம்பவே முடியல என்று பாடியிருப்பார்.

முதல் சரணத்தில் ஆணவம் உள்ளவரை ஆண்டவன் தெரியாது. ஆண்டவனை அடைவதற்கு நாணயம் தான் முக்கியம் என்பார்.

Palani mootai sithar
Palani mootai sithar

அடுத்த சரணத்தில், காசியில் நீ குளிச்சாலும், வாசியை நீ பிடிச்சாலும் சக்தி தரும் மந்திரங்கள், ஆயிரம் நீ படிச்சாலும் ஆசை குணம் அழியாமல் ஆண்டவனும் தெரியாது என்று பாடியிருப்பார்.

பகுத்தறிவு என்பதெல்லாம் காசு பணம் சேர்த்திடத்தான், பகவானின் கீதை கூட பொழுதினை போக்கிடத்தான் என்று சொல்லி இருப்பார். கடைசி சரணத்தில், ரொம்ப அழகாகச் சொல்லியிருப்பார். யோகியனாய் மாறும் மு;னனே யோகியாய் மாறுவதா? யோகத்தை அறிந்த பின்னும் போகத்தை நாடுவதா? என்று சொல்லியிருப்பார்.

இதையும் படிங்க… பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…

நேர்மையாய் வாழ்பவன் கடவுளின் பாவியடா, தன்னைத் தான் அறிந்தவனோ, தரணியிலே கடவுளடா என்று ரொம்பவே அழகாகச் சொல்லியிருப்பார்.

இந்தப்பாடலைத் தினமும் கேட்டால் மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் போய்விடும். அதன்பிறகு ஞானம் பிறக்கும். தொடர்ந்து பிற மனிதனை நேசிக்கும் அன்பு பெருகும். மதம் கடந்து கடவுளையும், மனிதனையும் நேசி என்று அழகாகச் சொல்லும் பாடல் இது தான்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews