ஊர்வசி.. ஊர்வசி பாட்டுக்கு 4 மாசமா? இளைஞர்கள் Heart Beat எகிற வைத்த ARR – பிரபுதேவா காம்போ..!

Published:

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளல் இருக்கும். மொழி கடந்து உலகில் உள்ள அனைவரயும் தனது இசையால் கட்டிப்போடும் மாய வித்தைக்காரர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசைப்புயல் என்றால் இன்னொருவர் நடனப் புயல் பிரபுதேவா. இருவரும் இணைந்து தமிழ் சினிமார் ரசிகர்களுக்கு அளித்த பாடல்கள் எப்போதுமே மாஸ் ஹிட் பாடல்கள் தான். மன அழுத்தத்தில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தும் எனர்ஜி பானமாக விளங்குகிறது.

சிக்கு புக்கு ரயிலே என ஜென்டில்மேன் படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம், காதலன் படத்தில் உச்சம் தொட்டது. இன்றும் முக்காலா பாடலுக்கு ஆடாத கால்களே இல்லை என்னும் அளவிற்கு இசையா? நடனமா? என் போட்டி போட்டு ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்திருப்பர். காதலன் படத்தில் முக்காலா பாடலில் இளைஞர்களை vibe ஏற்றிய இந்த combo அதே படத்தில் அப்படியே என்னவளே பாடலில் இதயத்தை வருடியிருப்பர்.

ஷங்கர், பிரபுதேவா, ஏ.ஆர். ரஹ்மான் இந்த கூட்டணி உருவாக்கிய இந்த மேஜிக்கில் இடம்பெற்ற மற்றொரு பாடல் ஊர்வசி ஊர்வசி பாடல். இந்த பாடலுக்கான concept எல்லாமே take it easy என்பது தான். ஏ.ஆர். ரஹ்மான் இந்த பாடலுக்காக 4 மாதங்கள் வரை காத்திருந்தாராம். Take it Easy வார்த்தைக்கு முன்னதாக எதுவுமே சரியாக அமையவில்லையாம். அதன்பிறகே இறுதியாக ஊர்வசி.. ஊர்வசி என்ற வரிகள் set ஆகி இருக்கிறது.

யாருமே வாங்க வராத அஜீத் படம்.. அதன் பின் நடந்த அதிசயம்.. அமர்க்களமான ஆரம்பம்

ஜென்டில்மேன், காதலன், Love birds படத்திற்குப் பின்னர் இவர்கள் இணைந்த படம் தான் Mr. Romeo. இந்த படமும் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது. Romeo ஆட்டம் போட்டா என்று பாடல் துவங்கும் போது அதன் பின்னர் வரும் அதிரடி இசையும், அசத்தல் நடனமும் வேற ராகம் என்றே சொல்லலாம். இந்த படமும் பாடல்களுக்காகவே ஹிட் ஆனது. அதன் பின் மின்சாரக் கனவு. இதில் வெண்ணிலவே பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருதையே தட்டி சென்றார் பிரபுதேவா. மானா மதுர பாடலும், வெண்ணிலவே பாடலும் அப்படியே காதலன் ரகம். ஒன்று துள்ளலிசை மற்றொன்று மனதை வருடும் மெல்லிசை மெலடி.

இப்படி இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் மீண்டும் இந்த காம்போ உருவாகும் முயற்சியை தற்போது மேற்கொண்டு வருவது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் உங்களுக்காக...