குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்னும் ஒரு சிலர் குரு பார்க்க கோடி புண்ணியம் என்றும் சொல்வர். இது உண்மை தான். உதாரணத்திற்கு பொண்ணு தேடும் படலம் ஒரு வீட்டில் நடந்தால் மாப்பிள்ளை ஜாதகம் வந்ததும் ஜோதிடரிடம் சென்று ஜாதகம் பார்க்க செல்வார்கள்.
அவர் முதலில் பார்ப்பது குரு பகவான் எந்த பாவத்தில் இருக்கிறார் என்பதாகத் தான் இருக்கும். குரு பெயர்ச்சி பலன்களின் போதும் பெரும்பாலான மக்கள் ஜாதகத்தில் ஆர்வம் காட்டுவர். தனக்கான ராசிக்கு அல்லது நட்சத்திரத்துக்கு என்னென்ன பலன்கள் நடக்கப்போகிறது என்பதை அறிய மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
அது ஞான குரு என்றால் உங்கள் பாதை வளர்ச்சியில் தான் செல்லும். குரு பார்க்கும் போது அசுப கிரகங்கள் கூட சுபமாக மாறி நன்மை செய்யும் என்பது ஐதீகம். பொதுவாக வளர்ச்சி, குழந்தை, திருமணம் மற்றும் அறிவுக்கு அதிபதி யார் என்றால் அது குரு பகவான் தான்.
குருபகவானை வழிபடும் முறை பலருக்கும் தெரிவதில்லை. ஞானத்தின் திருவுருவாக விளங்குபவர் தட்சணாமூர்த்தி. தன்னை வணங்கும் பக்தர்களுக்கும் குறைவில்லாத ஞானத்தை வாரி வழங்குபவர் இவர் தான். இவரை முறையாக வழிபடுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
வியாழக்கிழமை குருவிற்கு உகந்த நாள். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும். குரு பகவானுக்கு ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை 11 ஆகவோ 21 ஆகவோ இருக்கலாம்.
தட்சணாமூர்த்திக்கு உகந்த மலர் முல்லை மற்றும் மல்லிகை. அதனால் இதை மாலையாக அணிவித்து கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும்.
இவரை வலம் வருகையில் 3 அல்லது 9 அல்லது 11 ஆகிய முறைகளில் சுற்றி வருவது சிறந்தது. குருவிற்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தபட்சம் 36 முறை கூறி வந்தால், வாழ்வில் உள்ள இன்னல்கள் எத்தகையதாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி நன்மை உண்டாகும்.
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவ ஸ_வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்