காலையில் எழுந்ததும் இதைச் செய்யுங்கள்… செரிமானப் பிரச்சனையே வராது..!

By Sankar Velu

Published:

உடலில் உள்ள கழிவுகள் அவ்வப்போது சீராக வெளியேறினால் தான் நம்மால் சாப்பிட முடியும். தண்ணீர் நல்லா குடிக்க வேண்டும். காலையில் தூங்கி எழுந்த 45 நிமிடத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும். 2லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

அப்போது புளிப்பாக ஒரு கபம் வெளியேறும். கையை வாயில் விட்டு குத்த வேண்டாம். இரு விரல்களை மேலும் கீழுமாக அசைத்தால் போதும். அந்த கபத்தை எவ்வளவு தூரம் நாம் வெளியே எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

gravy
gravy

இதை வாரத்தில் இருமுறையாவது நாம் செய்து வந்தால் செரிமான பிரச்சனையே வராது. குழம்பு, கிரேவி, பொரியல் ஆகிய உணவுகள் எல்லாமே அசிட்டிக் உணவுகள். இதை சாப்பிடும்போது கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பச்சைக்காய்கறிகள் எல்லாம் ஆல்கலி உணவுகள். இதை சாப்பிடும்போது எந்த பிரச்சனையும் வராது.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றைப் பருகலாம். இது செரிமானக்கோளாறுக்கு சிறந்த மருந்து. ஒரு வாரத்திற்காவது இதை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

agathi keerai
agathi keerai

அதே போல் அகத்திக்கீரையை 15 நாள்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வர வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தண்ணீர் குடிக்காதீர்கள்.

தண்ணீரை அவ்வப்போது குடித்தால் உணவானது நீருடன் கலந்து இருப்பதால் செரிமானமாக நேரமாகும். அதனால் இதைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளுங்கள். முடிந்த அளவு வெந்நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சீரகத்தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்தால் அது நன்கு செரிமானத்தைத் தூண்டி விடும்.

banana
banana

சாப்பிட்ட உடனே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதுவும் செரிமானத்தைத் தூண்டி விடும். ஒரு கப் பால் குடிங்க. இரவு உணவை 6 அல்லது 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள். உட்டியாசனம் (நவ்லி கிரியா) தினமும் 30 விநாடிகள் செய்து வந்தால் செரிமானம் நன்கு நடைபெறும்.

நன்றாக மென்று சாப்பிட்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளே வராது. நாம் சாப்பிடும் உணவானது உமிழ்நீருடன் கலந்து நன்கு அரைத்து சாப்பிடப்பட வேண்டும்.

Leave a Comment