வீட்டிற்குள் நுழையும் பகைவருக்கும் நல்லெண்ணம் உண்டாக மறக்காமல் இதைச் செய்யுங்க..!

Published:

தினமும் நமக்குப் பலவிதமான மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களில் சிலர் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள். ஒருசிலர் நமக்கே தெரியாமல் எதிரிகளாக இருப்பார்கள். வீட்டுக்கு ஒரு சிலர் வருவார்கள். அவர்கள் யார் எவர் என்றே தெரியாது. ஏதாவது ஒரு காரணமாக அவர்கள் வந்திருப்பார்கள்.

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாது. அவர்கள் ஒருவேளை நம் மறைமுக எதிரிகளாகக் கூட இருக்கலாம். அவர்கள் மனதில் என்ன நினைப்பார்கள்? ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கும் வலிமை உண்டு. அது யாரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

அது ஆரோக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். அப்படி என்றால் நம் வீட்டில் எப்போதும் தெய்வீக சக்தி நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தெய்வீக ஆற்றலை அதிகப்படுத்த இந்த நாலு விஷயங்களைச் செய்தால் போதும். ஒரு வீட்டில் முதலில் மந்திர ஓசைகள் ஒலிக்க வேண்டும். காலை, மாலை என இருவேளைகளிலும் மந்திர ஓசைகள் ஒலிக்க வேண்டும்.

வீட்டுக்குள் போகும்போதே நமக்கு அந்த வீட்டில் தெய்வீக சக்தி இருக்குன்னு நாம் உணர முடியும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அதிர்வலை உண்டு. ஒரு வீட்டுக்குள்ள வந்ததும் ஒரு கோவிலுக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. அதுக்கு இந்த நாலு விஷயங்களைச் செய்தால் போதும்.

pooja bell
pooja bell

தெய்வீகப் பாடல்களை காலை, மாலை என இருவேளைகளிலும் விளக்கேற்றி இறைவனை வழிபாடு செய்யும்போது ஒலிக்கச் செய்யலாம். சிவபுராணம், கந்த சஷ்டிகவசம், சுப்ரபாதம், விஷ்ணுசகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், கந்த குருகவசம், பாம்பன் சுவாமிகளின் சண்முகக்கவசம், பகைக் கடிதல் ஸ்தோத்திரம், குமாரஸ்துவம், தேவாரம், திருவாசகம், திருமுறைகள் என நிறைய பதிகங்கள் உள்ளன.

Kolaru pathigam 1
Kolaru pathigam

இவற்றில் நமக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை காலை, மாலை என 2 வேளைகளிலும் சத்தமாகப் படிக்க வேண்டும். அல்லது ஆடியோக்களை ஒலிக்கச் செய்யலாம். விநாயகர் அகவல், கோளறு பதிகம் என யுடியூப்பிலிருந்தும் போட்டு விடலாம்.

உடல் ஆரோக்கியத்தைத் தரும் மகா மிருத்யுஞ்சம் மந்திரத்தை ஒலிக்கச் செய்யலாம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வாசனை தான் முக்கியமாக நம்மை ஈர்க்கும். அதனால் நல்ல நறுமணத்தை நாம் கொண்டு வர வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் சாம்பிராணி புகை போட வேண்டும்.

Kungiliyam
Kungiliyam

யாராவது வீட்டிற்குள் வந்தால் அவர்களுக்கு மன அமைதியைத் தரும். குங்கிலியத்தையும் சாம்பிராணிக்குப் பதிலாக போடலாம். இது நல்ல ஆற்றல்களை ஈர்க்கும். எதிர்மறை எண்ணங்களைப் போக்கி விடும்.

Vilakku
Vilakku

தினமும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மங்கல ஒளி தினமும் ஏற்றினால் அங்கு மகாலெட்சுமி வாசம் செய்வாள். மணி அடித்து பூஜை செய்வது என்பது மிக மிக முக்கியம். தினமும் ஏதாவது ஒரு நைவேத்தியம் வைக்கலாம். 2 கற்கண்டு, பேரிச்சை, வாழைப்பழம் என ஏதாவது ஒன்றை வைக்கலாம். கற்பூரம், நெய்தீபம் என ஏதாவது ஒன்றை ஏற்றி வழிபடுவது முக்கியம். மணி ஓசை கேட்கும்போது துர்தேவதைகள் வீட்டில் அண்டாது.

இருவேளைகளிலும் செய்ய முடியாதவர்கள் ஒருவேளையாவது இப்படி பூஜை செய்வது மிக மிக முக்கியம். வீட்டில் அம்மா இல்லாமல் வெளியில் போயிருந்தாலும் பிள்ளைகளுக்கு செய்ய கற்றுக்கொடுங்கள்.

 

 

மேலும் உங்களுக்காக...