பூரணத்துவம் நிறைந்த தைப்பூசம்….

By Staff

Published:

7f3d9e0ae07dcf544bb212efd357ff2a-1

தேவர்களின் பகல்பொழுது உத்தராயணம் என அழைக்கப்படுது. உத்தராயண காலம் தைமாதத்தில் ஆரம்பிக்குது. எனவே தேவர்களின் காலைப்பொழுது தைமாதம் ஆகும். சிவ அம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சிப் பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்க்கோட்டில் நிக்க “தைப்பூசம்” அமைகின்றது. அப்பேற்பட்ட புண்ணிய நாள் நாளை (8/2/2020) கோலாகலமாய் கொண்டாடப்படுது.

தைப்பூச நாளன்றுதான் உலக சிருஷ்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிவசக்தி ஐக்கியம் இந்நாளில்தான் நிகழ்ந்ததாக சொல்லப்படுது. சிவனில்லையேல் சக்தியில்லை…. சக்தியில்லையேல் சிவனில்லைன்ற கூற்றுப்படி சிவனும், சக்தியும் இணைந்ததால் உலகம் உருவாகி, இயங்குது. இந்த புண்ணிய தினத்தில் முதலில் உருவானது “நீர்”, அதன்பின் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என உருவானதாக நம்பிக்கை. உலக இயக்கத்திற்கு ஆதாரமான பஞ்சபூதங்கள் சிருஷ்டிக்கப்பட வழிகோலிய இத்திருநாளை போற்றி வழிப்பாடு செய்கின்றோம்.

f0700bcc49ecb86c9482bed812b3d678

இயற்கையையும் தெய்வமாய் வழிபடும் நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலும் தைப்பூசம் கொண்டாடப்படுது. உலக இயக்கங்கள் அனைத்துக்கும் இயற்கையைமீறி எதும் செயல்படமுடியாது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே இயற்கையே அடித்தளமா இருக்கு. தோற்றத்திற்கும், மறைவிற்கும், அதற்கிடைப்பட்ட காலங்களின் செயல்பாட்டிற்கும் இயற்கையே அடிப்படை விதியாகும்.

பூச நட்சத்திரத்தின் அதிபதி தேவர்களின் குருவான பிரகஷ்பதி(குரு பகவான்) இவரே அறிவின் தேவதையுமாவார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவப்பெருமானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டம் ஆடி காட்டிய நாள் இந்த தைப்பூச நாளாகும். இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளதை நமக்கு உணர்த்தும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.

dd8af2dced6d5f418058e98ca528903f

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் நட்சத்திரமாகும். தைமாதத்தில் பூச நட்சத்திரம் வரும்  நாளே ”தைப்பூச” திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாகவே  இருக்கும். தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல் என செய்கின்றனர். முருக பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், பாதயாத்திரை, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செய்கின்றனர். இந்த நாளில் முருகனின் அறுபடைவீடுகள் உள்ளிட்ட எல்லா முருகன் கோவிலிலும் அபிஷேகம், ஆராதனை என  தைப்பூச நன்னாள் விசேஷமாய் கொண்டாடப்படும்.  

Leave a Comment