தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலையில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வருமானவரித் துறையினர் படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் வருமான வரித்துறையின் விசாரணை முடிந்து இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென பாஜகவினர் சிலர் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் என்எல்சி சுரங்கம் அருகே போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
என்எல்சி சுரங்கத்தில் திரைப்படங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் இதனால் படக்குழுவினர்களிடையே பரபரப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது