மருத்து நீர் தேய்த்து குளிக்கும் வழக்கம் நம்ம ஊரில் ஒரு சிலரிடம்தான் உள்ளது தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கிறது மாதிரி எல்லோரிடமும் இது அறிமுகமாகி இராத விசயம்.
ஆனால் இலங்கை தமிழர்கள் பலரிடம் இது முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன இந்த மருத்து நீரில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மருத்துநீர் என்பது தமிழ் மருத்துவம் சார்ந்த ஒரு விசயம்தான் நீர். தலை குளிக்கும்போது செய்ய வேண்டிய ஒரு விசயம் முழுகுவதற்கான மருந்திட்ட நீர் இது.சித்திரை தமிழ் புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.
தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.
இந்த புத்தாண்டு புண்ணிய காலத்தில் எல்லோருமே இந்த மருத்து நீர் வைத்து குளித்தல் நன்மை பயக்கும் இப்போது உள்ள கொரோனா காலத்தில் இது கண்டிப்பாக அவசியமான ஒன்றாகும். பழமையான மூலிகைகளையும் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.
தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் குளித்தல் செய்தல் சிறப்புத் தரும்.
தற்போதைய கொரோனா ஹாலிடேஸ்ல மேற்கண்ட பொருட்கள் கிடைக்காதவர்கள் இலங்கையை சேர்ந்த இந்த குருக்கள் சொல்லும் எளிய பொருட்களை கொண்டும் செய்யலாம்.