தமிழில் வின்னர், சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரியாஸ்கான். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் இவர் சினிமாவில் நீண்ட நாட்களாக நடித்து வருகிறார்.
இவர் மனைவி உமா ரியாஸ் அவரும் ஒரு நடிகை.இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இவர் நின்று காஃபி சாப்பிட்டு கொண்டிருந்தபோது வாசல் கதவு அருகே தெருவில் நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்துள்ளனர் அவர்களை ஏன் இப்டி நிக்கிறிங்க இப்டிகூட்டமா நிற்க கூடாது லாக் டவுன் செஞ்சிருக்காங்க, கொரோனா வைரஸ் பரவுவது ஏன் என தெரியாதா என ரியாஸ்கான் கேட்டதற்கு ஒருவர் ரியாஸ்கான் மீது பாய்ந்து நீ நடிகர்னா பெரிய ஆளா எனஅடிக்க வந்து விட்டாராம்.
பின்பு காவல்துறைக்கு புகார் செல்லவும் இன்ஸ்பெக்டர் ஜோதி என்பவர் வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்..இது ஒரு அனுபவ பாடம் என்ற வகையில் ரியாஸ் தனது அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார்.