வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை.
சித்திரை மாதம் வரும் சிறப்புக்குரிய வழிபாட்டு நாள் அட்சய திருதியை. இந்த உன்னதமான நாள் 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் சுபமுகூர்த்த நாள், வாஸ்து நாளாகவும் உள்ளது.
இந்த நாளில் கிரகப்பிரவேசம் செய்வது ரொம்பவே சிறந்தது. வீடுகட்ட பூமி பூஜை, நிலைக்கால் விடுவது, வாகனம், துணி, நகை வாங்குவதற்கும் இது உகந்த நாள்.
முதலில் உப்பு, மஞ்சள் வாங்கி மகாலெட்சுமி வீட்டிற்கு வரட்டும் என நினைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு திட்டமிட்டுள்ளவர்கள் முதல் பொருள் இந்த நாளில் வாங்கலாம். பணக்காரர்களாக இருந்தால் தங்கம், நகை, வெள்ளி தானம் செய்யுங்கள். செய்ய முடியாதவர்கள் அரிசி, பருப்பு தானம் செய்யலாம்.
கோதுமை, துணிமணிகள் தானம் செய்யலாம். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக தானம் செய்து வரும்போது நாளாக நாளாக நிறைய தானம் செய்யும் சக்தியை மகாலெட்சுமி வழங்குவாள். ஆதிசங்கரர் மகாலெட்சுமியை பிரார்த்தனை பண்ணி கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார். அப்போது தங்க நெல்லிக்கனி மழை பெய்தது.
இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா தானம் பண்ணினால் மகாலெட்சுமியை பிரார்த்தனை பண்ண வேண்டும். வழிபட வேண்டும். அதோடு நம் செல்வம் நிலையாக இருக்கணும் என்பதையும் அம்பாளிடம் மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிரம்ம முகூர்த்த காலத்திலேயே புதுவீடு கட்டியவர்கள் பால் காய்ச்சினால் ரொம்ப விசேஷம். இறைவனை வழிபாடு செய்யும் நேரம் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை செய்யலாம். மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை எமகண்டம் இருக்கு. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகாலம் இருக்கு. இந்த நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
நைவேத்தியமாக இனிப்பு பாயசம், பால் பாயசம், அரிசி பாயசம், கல்கண்டு சாதம் செய்யலாம். வெள்ளை நிற மலர்கள் ரொம்பவே விசேஷம். சுவாமிக்கு சிறப்பு.
மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை முழுமையாக பிரார்த்தனை செய்ய வேண்டும். மகாலெட்சுமிக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி குங்கும அர்ச்சனையும் செய்வது அதிவிசேஷம்.
அருகில் உள்ள கோவிலுக்குப் போய் இறைவனை மனதார வழிபட்டு வரலாம்.