717 நாட்களுக்கு பின் மீண்டும் ஐபிஎல் விளையாடிய வீரர்.. 2 விக்கெட் எடுத்ததால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி..!

Published:

717 நாட்களுக்குப் பின்னர் ஐபிஎல் விளையாடிய பிரபல பந்துவீச்சாளர் நேற்று நடந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று நடந்த 28 வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 20 அவர்களில் அனைத்து விக்கட்டையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான ஜேஷன் ராய் 43 ரன்கள் அடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் ஆண்ட்ரு ரஸல் 38 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதை. வெங்கடேஷ் ஐயர் நிதிஷ் ராணா, சுனில் நரேன் உள்ளிட்ட பிரபல பேட்ஸ்மேன்கள் நேற்று சொற்ப ரன்களை எடுத்து தங்கள் விக்கட்டுகளை பறிகொடுத்தனர் .

ishanthஇந்த நிலையில் 128 என்ற எளிய இலக்கை நோக்கி டெல்லி அணி நேற்று பேட்டிங் செய்தது. டெல்லி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில் நேற்றைய எளிய இலக்கை விரைவில் எட்டி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20வது ஓவரில் தான் அந்த அணி 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட்வார்னர் 57 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணியில் இஷாந்த் சர்மா விளையாடினார். அவர் 717 நாட்கள் கழித்து ஐபிஎல் விளையாடினார் என்பதும் நேற்றைய போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான இஷாந்த் சர்மா நேற்று நான்கு ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெல்லி அணிக்காக 50 லட்ச ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...