ஆடி ஞாயிறுகளில் இப்படி செய்து பாருங்க… அடுத்த ஆண்டே இவ்ளோ பலன் காத்திருக்கு!

ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை அம்பாளுக்கு பொதுவாகவே விசேஷமான நாள். இந்த நாளில் செய்யக்கூடிய விஷயம் வளரும்னு சொல்வாங்க. அதனால தான் பிள்ளைகளைக் காலையில உட்கார்ந்து…

ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை அம்பாளுக்கு பொதுவாகவே விசேஷமான நாள். இந்த நாளில் செய்யக்கூடிய விஷயம் வளரும்னு சொல்வாங்க. அதனால தான் பிள்ளைகளைக் காலையில உட்கார்ந்து படிக்க சொல்வாங்க. அன்றைய நாளில் அன்னதானம் பண்ணினா ரொம்ப விசேஷமான பலன்களைத் தரும். அந்த வகையில் ஆடி மாதத்தில் முதல் ஞாயிறு 19.7.2026 வருகிறது.

அடுத்து 26.7.2026, 2.8.2026, 9.8.2026, 16.8.2026 என்று வரிசையாக வருகிறது. 5 ஞாயிறு வருகிறது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை. பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு. குலதெய்வ கோவிலில் போய் பொங்கல் வைத்தால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

கோவிலுக்குப் போக முடியாதவர்கள் வீட்டிலேயே சர்க்கரைப் பொங்கல் வைத்து குலதெய்வத்துக்குப் படைக்கலாம். அதையே அன்னதானமாகவும் செய்யலாம். 2வது வாரம் கூழ் காய்ச்சி ஊத்துதல். 3வது வாரம் கன்னி தெய்வ வழிபாடு விசேஷம். கன்னியம்மன் கோவில், சப்த கன்னிமார் ஆலயங்களுக்குச் சென்று அம்மனை வழிபடுங்க.

4வது வாரம் கூட்டுப் பிரார்த்தனை செய்வது சிறப்பு. குடும்ப நலன், தொழில், சந்ததியினர் மற்றும் உலக நன்மைக்காக இது சிறந்த பலனைத் தரும். கடைசி ஞாயிற்றுக்கிழமை நாகசதுர்த்தி வருது. அன்று கோவிலுக்குச் சென்று வழிபடுவது விசேஷம்.

எதுவுமே செய்ய முடியாதவர்கள் இந்த ஞாயிறுகளில் 2 பேருக்காவது அன்னதானம் செய்யுங்க. அடுத்த ஆண்டே 50 பேருக்கு அன்னதானம் செய்ற அளவுக்கு உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.