ஆடி வெள்ளியில் செய்ய வேண்டிய வழிபாடு… அட 2026ல் இத்தனை சிறப்புகள் இருக்கா?

இந்த ஆண்டு ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. அந்த வகையில் ஆடி மாதம் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வருகின்றன? வழிபாடு செய்வது எப்படி? 17.7.2026, 24.7.2026, 31.7.2026, 7.8.2026, 14.8.2026 என 5 வெள்ளிக்கிழமைகள்…

இந்த ஆண்டு ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. அந்த வகையில் ஆடி மாதம் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வருகின்றன? வழிபாடு செய்வது எப்படி? 17.7.2026, 24.7.2026, 31.7.2026, 7.8.2026, 14.8.2026 என 5 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை வழிபாடு. அடுத்து 2வது வெள்ளி 24ம் தேதி மாவிளக்கு இட்டு வழிபாடு செய்தல். பொதுவாக நமக்கு நேர்த்திக்கடன் செய்ய தாமதம் அல்லது மறந்து போயிடுச்சு. அப்படின்னா அம்பாளுக்கு நாம் கடன் காரன். அப்போது மாவிளக்கு இட்டு வழிபடும்போது அம்பாள் நம் வேண்டுதலை நிறைவேற்றுவாள். எதை நினைத்து நாம் வழிபாடு செய்கிறோமோ, அப்படியே அம்பாள் நிறைவேற்றுவாள்.

மாவிளக்கு வழிபாடு வேண்டுதலை நிறைவேற்றவே செய்யும் எளிமையான சக்திவாய்ந்த வழிபாடு. கோவிலில் போக முடியாதவர்கள் வீட்டிலும் பண்ணலாம். அம்பாளுக்குரிய பாடலைப் பாடலாம். 3வது வாரம் 31ம் தேதி படையல் போட்டு வழிபாடு செய்யலாம். முதல், 3வது அல்லது 5வது வாரம் படையல் போடலாம். அன்றைய நாளில் 5 வகையான சாதங்கள் அல்லது 3 வகையில் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் என வைத்துக் கொள்ளலாம். கூழ் காய்ச்சுபவர்கள் அதை வைத்துக்கொள்ளலாம். இளநீர், துள்ளுமாவு, பானகரம் வைக்கலாம். கலசம் வைத்து வழிபடுபவர்கள் அப்படியே செய்யலாம். நல்ல கமகமன்னு சாம்பிராணி போட்டு வழிபாடு பண்ணுங்க. அன்றைய நாளில் தானம் செய்யலாம்.

4வது வெள்ளிக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்து கொள்ளலாம். எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், தெய்வ அருள் இருந்தால் தான் வீட்டில் மகிழ்ச்சி கிடைக்கும். கடைசி வாரம் ஆடிப்பூரமாக வருகிறது. ஆடி மாதம் முழுக்க வீட்டில் மங்கலப் பொருள்களை வாங்கி வைத்துக்கோங்க. சுமங்கலி பெண்கள் யார் வந்தாலும் அவங்களுக்கு கொடுங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.