நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!

எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக்…

thai amaavasai

எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக் கட்டாயமாக செய்ய வேண்டும். செய்தால் நல்லது. என்னன்னு பார்க்கலாமா…

தை மாத அமாவாசை அன்று காலையில் தர்ப்பணம் கொடுத்த பிறகு மதியம் இலை போட்டு படையல் வைத்து வழிபடுங்க. காகத்திற்கு உணவு வைத்த பிறகு சாப்பிடுங்க. மாலை வீட்டில் விளக்கு எப்போதும் ஏற்றினால் ஒரு அகல்விளக்கு தனியாக சிறிது நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்க.

இது நம் முன்னோர்களுக்காக ஏற்றுவது. மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஏற்றலாம். பலருக்கும் பலவிதமான கேள்விகள் எழுவதுண்டு. நாங்க புடவை, வேட்டி துணிமணி கொடுக்கலாமா, 100 பேருக்கு சாப்பாடு கொடுக்குறோம்,

பசுமாட்டுக்கு அகத்திக்கீரை எல்லாம் கொடுக்கறோம். இதை வழக்கமா செய்யணுமா இல்லன்னா தை அமாவாசைக்கு மட்டும் செய்யணுமான்னு கேட்பாங்க. தை அமாவாசைக்கு இதுமாதிரி விசேஷமா செய்யலாம். சாதாரண அமாவாசைக்கு நம்மால என்ன முடியுதோ அதைச் செய்யலாம்.

2 பேருக்கு அல்லது ஒருவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். காலையில் தர்ப்பணம், மாலை இலை போட்டு படையல், மாலை விளக்கேற்றுவது என்று இந்த 3 விஷயங்களையும் மறக்காமல் தை அமாவாசைக்கு செய்யுங்க. இந்த 3ல ஏதாவது 1 தான் செய்ய முடியும்.

மற்றது எல்லாம் செய்றதுக்கு வாய்ப்பு இருக்கான்னு தெரியாது. நாங்க ரொம்ப பிசின்னு சொல்றவங்க நாலு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் அது மிகப்பெரிய புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

தமிழகத்தில் நாளை தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூட்டம் கூட்டமாகச் செல்வார்கள்.