நம் உடல் நலனையும் மன நலனையும் அதிகப்படுத்த யோகாசனம் உதவுகிறது. யோகாசனத்தின் முக்கியத்துவத்தையும் அனைவரும் யோகாவை தினமும் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த யோக கலை என்பது 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. யோகா இந்திய நாட்டில் தான் பிறந்தது. இந்திய நாட்டின் மூலமாக உலக அளவிலும் பரவியது யோகாசனம். இது நம் நாட்டின் பெருமை ஆகும்.
நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. யோகாசனம் செய்வதால் உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறது ஜிம்முக்கு செல்லாமல் எந்த உபகரணங்களும் இல்லாமல் உடலை பாதுகாக்க யோகாசனம் உதவுகிறது என்பதை எடுத்துரைக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் யோகாசனத்தை வாழ்க்கையுடன் தொடர்பு படுத்துவது எவ்வளவு நன்மையானது என்பதை எடுத்துரைப்பது ஆகும்.
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் “ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” ஆகும். இந்த ஆண்டு 11 வது முறையாக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் யோகா சங்கம் மூலமாக ஒரு லட்சம் இடங்களில் மக்களை திரட்டி யோகாசனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
யோகாசனம் செய்வதால் மன அமைதி தெளிவு கிடைக்கும். சிந்தனை நினைவகம் கவனம் ஆகியவற்றில் அதிக நாட்டம் பெற விரும்பினால் யோகாசனம் செய்ய வேண்டும். நம் மூளையின் பாகங்களை பலப்படுத்த யோகா பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. யோகாசனம் என்பது கடினமானது என்பது கிடையாது. பயிற்சி செய்வதன் மூலம் நம்மாலும் யோகாசனம் செய்ய முடியும்.
தினமும் யோகாசனம் செய்ய தொடங்கினால் உங்களுக்கே உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணர முடியும். உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய யோகாசனத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு ஊக்குவிப்பதே சர்வதேச யோக தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யோகாசனம் செய்ய வைக்க பலவித கூட்டங்கள் நடைபெறும். நீங்களும் யோகாசனத் தை முயற்சித்து வாழ்வில் பயனடையுங்கள்.