சிலிண்டர் வாங்கப் போறீங்களா? முதல்ல இதைக் கவனிங்க!

இன்று வீடுகளில் அத்தியாவசியத் தேவை கேஸ் அடுப்பு. விறகு பொறுக்கி அடுப்பு எரித்த காலம் மலையேறி விட்டது. சின்ன குடும்பமாக இருந்தாலும் கேஸ் அடுப்பு தான். அதே நேரம் இந்த சிலிண்டரை நாம் மிகவும்…

இன்று வீடுகளில் அத்தியாவசியத் தேவை கேஸ் அடுப்பு. விறகு பொறுக்கி அடுப்பு எரித்த காலம் மலையேறி விட்டது. சின்ன குடும்பமாக இருந்தாலும் கேஸ் அடுப்பு தான். அதே நேரம் இந்த சிலிண்டரை நாம் மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும்.

அதற்கு முதலாவதாக சிலிண்டர் வாங்கும்போது அது காலாவதியா எப்படின்னு பார்க்கணும். இதை சரியாகப் பார்க்காமல் காலாவதியான சிலிண்டரை வாங்கி உபயோகிப்பதால் தான் பல விபத்துக்கள் உண்டாகிறது. அதைக் கண்டறிவது எப்படி வாங்க பார்க்கலாம்.

தற்போது அதிகமானோர் பயன்படுத்தப்படும் கேஸ் அடுப்புக்கு சிலிண்டர் தான் உபயோகமாகிறது. பலரது வீடுகளில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதை பார்த்தாலே அச்சமாக தான் இருக்கும். இருந்தாலும் இப்படி இருக்கும் சூழலில் நம்மால் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்ப இயலாது. அதனால் சிலிண்டரின் காலாவதி தேதியை தெரிந்து கொள்வதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.

உங்கள் சிலிண்டர் விநியோகிப்பவர் முன்னிலையிலேயே இதை தெரிந்து கொண்டால், அவரிடம் திரும்பி கொடுத்து விடலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…

ஒவ்வொரு எல்பிஜி கேஸ் சிலிண்டரைச் சுற்றியும் 3 உலோகக் கம்பிகள் இருக்கும். இந்த கம்பிகளில் சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். சிலிண்டரில் A-23, B-25, C-24 அல்லது D-23 போன்ற எழுத்து மற்றும் எண் எழுதியிருக்கும். சிலிண்டரில் எழுதப்பட்டிருக்கும் A முதல் D வரையிலான எழுத்துக்கள் மாதங்களை குறிக்கிறது.

A – ஜனவரி முதல் மார்ச் வரை

B – ஏப்ரல் முதல் ஜூன் வரை

C – ஜூலை முதல் செப்டம்பர் வரை

D – அக்டோபர் முதல் டிசம்பர் வரை

A முதல் D வரையிலான எழுத்துக்களுக்கு பின்பு வரும் 24, 25 போன்ற எண்கள் எக்ஸ்பயரி ஆகும் ஆண்டைக் குறிக்கிறது. உதாரணமாக 25 என்பது 2025-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. தற்போது உடனே உங்கள் சிலிண்டரில் இருக்கும் காலாவதி தேதியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த மாதத்தின் படி உங்கள் வீட்டில் B 25 என்று இருக்கும். இதை பலரும் தெரியாமல் இருப்பதால் சில விபத்துக்களில் சிக்க நேரிடும்.